สารบัญ:
- இருமலுக்கானகாரணங்கள் - สาเหตุของอาการไอในภาษาทมิฬ
- இருமலுக்கானஅறிகுறிகள்என்னென்ன - อาการไอในภาษาทมิฬ
- இருமலின்வகைகள் - ประเภทของอาการไอในภาษาทมิฬ
- வீட்டுவைத்தியமுறையில்இருமலைசரிசெய்வதுஎப்படி-การเยียวยาที่บ้านสำหรับอาการไอในภาษาทมิฬ
- வெந்நீர்உப்புவைத்தியம்
- உங்களுக்குத்தேவையானவை
- என்னசெய்யவேண்டும்
- எவ்வளவுமுறைசெய்யலாம்
- இதுஎப்படிவேலைசெய்கிறது
- ஆவிபிடித்தல்
- நன்றாகஆவிபறக்க கொதிக்க வைத்தவெந்நீர்
- என்னசெய்யவேண்டும்
- எவ்வளவுமுறைசெய்யலாம்
- இதுஎப்படிவேலைசெய்கிறது
- இருமலுக்கு அருமருந்தான தேன்
- உங்களுக்கு தேவையானவை
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்யலாம்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலைக் குணமாக்கும் இஞ்சி
- உங்களுக்குத் தேவையானவை
- என்ன செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலை சரி செய்யும் கிராம்பு
- உங்களுக்கு தேவையான பொருள்
- என்ன செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலை விரட்டும் கருமிளகு
- உங்களுக்கு தேவையானவை
- என்ன செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமல் குணமாக உதவும் பூண்டு
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலுக்கு ஏற்ற மருந்து துளசி
- உங்களுக்கு தேவை
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலை நீக்கும் மஞ்சள்
- என்ன தேவை
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்யலாம்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலை போக்கி இதமாக்கும் க்ரீன் டீ
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை
- எப்படி வேலை செய்கிறது
- பலமான இருமலையும் பறந்து போக செய்யும் பட்டை
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்யலாம்.
- எப்படி வேலை செய்கிறது
- எத்தகைய இருமலையும் சரியாக்கும் எலுமிச்சை
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எப்படி வேலை செய்கிறது
- இருமலைக் குறைக்கும் வெல்லம்
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை நீங்கள் இதை செய்யலாம்
- எப்படி இது வேலை செய்கிறது
- இருமலை அடக்கும் நெல்லிக்காய்
- உங்களுக்கு தேவையானவை
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை
- எப்படி வேலை செய்கிறது
- இருமல் நீக்கும் ஓமம்
- உங்களுக்கு தேவையானது
- என்ன செய்ய வேண்டும்
- எவ்வளவு முறை செய்யலாம்
- எப்படி வேலை செய்கிறது
- இருமல் வராமல் காக்க சில முக்கியமான குறிப்புகள் – Prevention Tips For Cough in Tamil
- இறுதியாக
இருமல் - எல்லோருக்கும் வருகின்றசாதாரண நோய் என்றாலும்இருமல்வந்தவர்களுக்குத்தான்அதன்சிரமங்கள்தெரியும் இருமல்பகலில்வந்தாலும்சரி, இரவில்வந்தாலும்சரிஉண்மையில்மிகவும்சிரமப்பட்டு போய் விடுகிறோம். நாம்நிம்மதியாகஇருக்கும்உறக்கநேரங்களில்இருமல்ஏற்பட்டுதூக்கம்கலைகிறது. அதன்பின்கரகரக்கும் தொண்டையுடன் நாம்மீண்டும்உறங்கநேரம்எடுக்கும்.
உங்களுக்குஇளம் வயதோ அல்லதுமுதுமையான வயதோ யாராகஇருந்தாலும்இருமல்வந்தால்மிகவும்படுத்திவிடும் யாராகஇருந்தாலும் ஏதோ ஒருகாலகட்டத்தில்இந்தஇருமல்துன்பத்தைகடக்காமல்இருக்கமுடியாது சரிஅதனால்என்ன.. இருமல்ஒன்றும்குணப்படுத்தமுடியாதவியாதிஅல்லவே. இருமலைஎளிமையானவீட்டுவைத்தியங்கள்மூலம்சுலபமாககுணப்படுத்திவிடமுடியும்.
இருமலுக்கானகாரணங்கள் - สาเหตุของอาการไอในภาษาทมิฬ
இப்படிநம்மைபாடாய்ப்படுத்திஎடுக்கும்இந்தஇருமலுக்கானகாரணங்கள்என்னஎன்றுபார்க்கலாம். இருமலுக்கானகாரணங்கள்நிறையஇருந்தாலும்இவையேமுக்கியமானகாரணமாகும் (1).
- சுவாசக்குழாய் தொற்றுக்கள் என சொல்லப்படும் சளி, நிமோனியா, காய்ச்சல், சைனஸ்மற்றும்மூச்சுக்குழாய்அழற்சி போன்றவை இருமலுக்குகாரணமாகஅமைகின்றன.
- ஆஸ்துமாஇருந்தால்இருமல்வரவாய்ப்பிருக்கிறது.
- இரைப்பைஉணவுக்குழாய் நோய் இருப்பவர்களுக்குஇருமல்பாதிப்புஇருக்கும்.
- டிப்தீரியா, கக்குவான்இருமல் நோய் இருப்பவர்களுக்குஇருமல்கட்டாயம்இருக்கும்
- காச நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு இருமல்இருக்கும்.
- உடலுக்கு பொருத்தமற்ற சிலநுண்கிருமிகள்உள்நுழைவதால்இருமல்ஏற்படலாம்.
- உலர்ந்தஅல்லதுவறண்டவாய் / உதடு தொந்தரவு கொண்டவர்கள் இருமல் தொந்தரவுக்கு ஆட்படலாம்
- உணவுவிழுங்குவதில்சிரமம்இருப்பவர்களுக்குஇருமல்ஏற்படும்.
- நீரிழிவுமற்றும்உயர்இரத்தஅழுத்தத்திற்குபயன்படுத்தப்படும்மருந்துகள்எடுத்துக் கொள்பவர்களுக்கு இருமல்தாக்கவாய்ப்புஉள்ளது..
- நுரையீரல்கட்டிகள் / புற்று நோய் உள்ளவர்களுக்குஇருமல்ஏற்படும்.
- ஒவ்வாமை கொண்டவர்களுக்கு இருமல்இருக்கும்.
- காற்றுமாசுமூலம்வரும்கிருமி தொற்றுகள் இருமல்ஏற்படகாரணம்ஆகலாம்
இருமலுக்கானஅறிகுறிகள்என்னென்ன - อาการไอในภาษาทมิฬ
- சளி
- அதிகமானகாய்ச்சல் (உடல்வெப்பமடைதல்)
- குளிர்
- நெஞ்சுவலி
- தலைவலி
- மயக்கம்அல்லது சோர்வு
- மூச்சுவிடுதலில்சிரமம்
- மூக்குஅடைதல்
- தூக்கமின்மைகுறைபாடுகள்
இதெல்லாம்இருமல்ஏற்படுவதற்கானஅறிகுறிகளாககாணப்படுகிறது (1) .
இருமல்அதிகமாகநீடிக்காதவகையில்அதைப்பற்றிஅதிகமாகநீங்கள்கவலைப்படதேவையில்லை. நீடித்தஇருமல்அல்லது தொடர்ச்சியான இருமல்ஏற்பட்டால்அதைசற்றுகவனிக்கவேண்டியதுஅவசியம்ஆகும் ஆகவேஉங்களுக்குஏற்பட்டுள்ளஇருமல்என்னவகைஎன்பதைபற்றிநீங்கள்தெரிந்து கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது.அதன்வகைகள்பற்றிஅறிந்து கொள்ளுங்கள்
இருமலின்வகைகள் - ประเภทของอาการไอในภาษาทมิฬ
- கடுமையான இருமல் - 3 வாரங்களுக்குமேலாகஇருமல்இருக்குமேயானால்அதுகடுமையானஇருமல்வகை எனப்படும்
- நாள்பட்ட இருமல் -. இருமல் 3 வாரங்களைகடந்து 8 வாரங்கள்வரைதொடர்ந்துஇருக்குமானால்அதுநாள்பட்டஇருமல்வகை (அப்படிஇருப்பின்இந்தகட்டுரையைபடிப்பதைநிறுத்திவிட்டுமருத்துவரை உடனடியாகசந்திக்கவும் !)
- தீவிர இருமல் - மூன்றுமுதல்எட்டுவாரங்கள்வரைஇருமல்இருந்தால்அது தாழ்தீவிரஇருமல்எனப்படுகிறது,
- சளி இருமல் - நீங்கள்இருமும்போதுசளியுடன்இருமினால்அதுசளிஇருமல்
- வறண்ட இருமல் - சளிஇல்லாமல்வறட்சியானஇருமல்இருந்தால்அதுவும்கவலைக்குரியதே
- இரவு நேர இருமல் - இரவுநேரங்களில்மட்டுமேஇருமல்இருப்பின்அதுஇரவுநேர இருமல்எனப்படுகிறது
ஏற்கனவேகூறியபடிஇருமல்கள்பலவகையில்இருந்தாலும்அதில்சிலவகைகள்எளியமுறையில்குணப்படுத்திவிடும்படியானவகைகள் வெறும்ஆன்டிபயாடிக்மற்றும் TLC சிகிச்சைமூலம்உங்களுக்குவிரைவில்குணமாகும்வாய்ப்புஉள்ளது ஒருசில வகையோ தீவிரமருத்துவசிகிச்சைதேவைப்படும்இருமல்வகையாகும் (2).
சுவாசக்குழாய் தொற்று காரணமாகசாதரணமாகஏற்படும்இருமல்வகைகளுக்குவீட்டில்இருந்தேஇயற்கையானமுறையில்தீர்வுமுடியும் அவைஎன்னென்னஎன்றுபார்க்கலாம்.
வீட்டுவைத்தியமுறையில்இருமலைசரிசெய்வதுஎப்படி-การเยียวยาที่บ้านสำหรับอาการไอในภาษาทมิฬ
பக்கவிளைவுகள்அற்றஇயற்கைவீட்டுவைத்தியமுறைநமது முன்னோர்கள் நமக்காக கொடுத்து சென்றவிலைமதிப்பற்ற சொத்து எனலாம்.இருமலைமிகஎளிதாகஇயற்கைவைத்தியமுறையில்குணப்படுத்த அதற்கான 15 வீட்டுவைத்தியமுறைகளைஇங்கேபார்க்கலாம்
வெந்நீர்உப்புவைத்தியம்
உங்களுக்குத்தேவையானவை
1 ஸ்பூன்உப்பு
1 டம்ளர்வெந்நீர்
என்னசெய்யவேண்டும்
உப்பைவெந்நீருடன்கலக்கிநன்றாக தொண்டையில் படுமாறுஅண்ணாந்துபார்த்து கொப்பளித்து பின்னர்நீரைவெளியேற்றிவிடவும்
எவ்வளவுமுறைசெய்யலாம்
ஒருநாளில்மூன்றுமுறைஇவ்வாறுசெய்யலாம்.
இதுஎப்படிவேலைசெய்கிறது
உப்பில்இருக்கும் சோடியம் க்ளோரைட் இருமல்மற்றும் தொண்டைவலியை ஏற்படுத்தும்கிருமிகளைஅழிக்கிறது. இதனால் தொண்டை ஈரப்பதம் கொண்டு இருமலில்இருந்துவிடுபடுகிறது. இந்தஎளியவைத்தியமுறையைநீங்கள்சிலகாலம் தொடர்ந்து செய்துவந்தால்சுவாசக்குழாய் தொற்றுகள், கிருமிகள்இடம்இருந்துஉங்களைநிரந்தரமாககாத்து கொள்ள முடியும் (3).
ஆவிபிடித்தல்
உங்களுக்குதேவையானவை
நன்றாகஆவிபறக்க கொதிக்க வைத்தவெந்நீர்
ஒருபெரியதுண்டு
என்னசெய்யவேண்டும்
நன்றாக கொதிக்க வைத்தநீரின்ஆவிஉங்கள்முகத்தில்படுமாறுதுண்டைக் கொண்டு உங்களைமூடிக்வேண்டும் இதனால்ஆவிவெளியேறாமல்உங்கள்உடலில்பலமாற்றங்களைஏற்படுத்தும். தேவைப்பட்டால்சிலதுளிகள்யூகலிப்டஸ்எண்ணெய்அல்லதுவிக்ஸ் போன்றவற்றை சேர்த்திக் கொள்ளலாம்.
எவ்வளவுமுறைசெய்யலாம்
நாளொன்றுக்கு ஒருமுறைஅல்லதுஇருமுறைசரியாகும்வரைசெய்துவரலாம்.
இதுஎப்படிவேலைசெய்கிறது
ஆவி பிடித்தல் என்பது சிறு குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற ஒரு எளிமையான வீட்டு வைத்தியம். சூடான ஆவி உங்கள் சுவாசம் வழியே சுவாசக்குழாயில் பயணிக்கும்போது கட்டியாகி உறைந்துள்ள சளி கரைகிறது. கரைகின்ற சளி நீராக மாறி மூக்கு மற்றும் தொண்டை வழியே தன்னை வெளியேற்றி கொள்கிறது(4). சளி வெளியேறியபின் இருமலுக்கு அங்கே இடமேது !
Shutterstock
இருமலுக்கு அருமருந்தான தேன்
உங்களுக்கு தேவையானவை
தேன் – தேவையான அளவு
சில மூலிகைகள் (மிளகு, அதிமதுரம், எலுமிச்சை போன்றவற்றில் ஏதோ ஒன்று)
என்ன செய்ய வேண்டும்
கால் ஸ்பூன் தேனுடன் கால் ஸ்பூன் அதிமதுரப்பொடி மற்றும் கால் ஸ்பூன் பட்டைப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதனை அளவான சூடுள்ள நீரில் கலந்து குடிக்கவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
காலை மற்றும் மாலை இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி வேலை செய்கிறது
தேனில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அழற்சியை சரி செய்யும் மாயம் தேனிடம் அதிகம் இருக்கிறது. பென் நாட்டு மருத்துவக் கல்லூரியில் 2007ம் ஆண்டு நடந்த ஆய்வில் இருமலைக் குறைப்பதற்கான டெக்ஸ்ட்ரோமெத்தார்பான் எனும் மூலப்பொருள் தேனில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தேன் சிறந்த இருமல் நிவாரணி(5).
இருமலைக் குணமாக்கும் இஞ்சி
உங்களுக்குத் தேவையானவை
இஞ்சி – சிறிதளவு
நீர் – சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
சிறிதளவு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி நன்றாக தட்டி வைத்துக் கொள்ளவும்
நீரைக் கொதிக்க வைத்து அதில் தட்டி வைத்த இஞ்சியை சேர்க்கவும். கொதிக்க விடவும்.குடிக்கும் சூட்டில் சிறிதளவு தேன் சேர்த்து உண்ணலாம்.
கொஞ்சம் இஞ்சி ஒரு ஸ்பூன் அரிசிமாவு,தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை அரைத்த இஞ்சியுடன் கலந்து ஒரு பேஸ்ட் போல மாற்றி மார்பில் தடவி அப்படியே விடவும். காலையில் கழுவிக்கொள்ளலாம். குழந்தைகள் எனில் 2 மணி நேரத்தில் எடுத்து விடலாம். இதனால் மார்பில் ஏற்பட்டுள்ள சளி கரைந்து விடும்.
எப்படி வேலை செய்கிறது
பேக்டீரியா வைரஸ் தொற்றுக்களை நீக்கும் வல்லமை இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சியை எடுத்துக் கொள்வதால் சளியை அடியோடு அகற்றிவிடும் வல்லமை மிக்க மருந்தாக இஞ்சி பயன்படுகிறது(6).
இருமலை சரி செய்யும் கிராம்பு
உங்களுக்கு தேவையான பொருள்
கிராம்பு பொடி – சிறிதளவு
பனங்கற்கண்டு – சிறிதளவு
பால் – 1 கப்
என்ன செய்ய வேண்டும்
கிராம்பு பொடி மற்றும் பனங்கற்கண்டு இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைத்து இந்தக் கலவையை அருந்தி வரவும்.
எப்படி வேலை செய்கிறது
அளவில் சிறிதான கிராம்பு அதன் வீரியத்தில் சிறப்பானதாக இருக்கிறது(7). மண்ணீரல், வயிறு, சிறுநீரகம் போன்ற மருத்துவ சிக்கல்களுக்கு கிராம்பை பயன்படுத்தி வருவது வழக்கம்.நமது தமிழ்நாட்டு சமையலில் முக்கியமாக கிராம்பு பயன்படுகிறது. சீன மருத்துவத்திலும் கிராம்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருமலை விரட்டும் கருமிளகு
உங்களுக்கு தேவையானவை
கருமிளகு – ஒரு ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்
கருமிளகை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். உணவு உண்ட பின்னர் உருக்கிய நெய்யை மிளகுத்தூளுடன் கலந்து ஸ்பூனில் அருந்தவும்.
எப்படி வேலை செய்கிறது
கரு மிளகு இயர்கையாகவே கிருமிநாசினி மற்றும் ஆன்டிபயாடிக் தன்மையை கொண்டது(8). சூடான நெய்யில் மிளகு சேர்க்கும்போது உங்கள் சளியை அது இளக்கி வெளியேற்றி விடும்.ஒருநாளைக்கு 3 முறை இப்படி செய்து வரலாம்.
இருமல் குணமாக உதவும் பூண்டு
உங்களுக்கு தேவையானது
பூண்டு – 2 அல்லது 3 பல்
பால் – 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
பாலில் பூண்டு வேகும் வரை கொதிக்க விடவும்.
எவ்வளவு முறை செய்ய வேண்டும்
வாரத்தில் 2 முதல் மூன்று முறை இப்படி பாலைத் தயாரித்து இரவு உறங்கப்போகும் முன் அருந்தி வந்தால் சில நாட்களில் ஆச்சர்யப்படும்படியான மாற்றங்கள் ஏற்படும். இருமல் குணமாகும். மீண்டும் வராது.
எப்படி வேலை செய்கிறது
பூண்டில் ஆன்டிபேக்டீரியல் தன்மைகள் அதிகம் உள்ளது. எவ்வளவு கடுமையான இருமலாக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இருமல் மூலம் ஏற்படும் கடும் உடல்வலியையும் அது நீக்குகிறது (9).
இருமலுக்கு ஏற்ற மருந்து துளசி
உங்களுக்கு தேவை
துளசி இலைகள் – 1 கைப்பிடி
என்ன செய்ய வேண்டும்
நன்கு கழுவிய துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
எவ்வளவு முறை செய்ய வேண்டும்
நாளொன்றுக்கு இரண்டு முறை செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி இலைகள் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. துளசி இலை மன அழுத்தம், ஞாபக சக்தி கோளாறுகள், ஆஸ்துமா, இருமல் போன்ற பல நோய்களை நீக்கும் ஆன்டிபயாடிக் மற்றும் கிருமிநாசினி தன்மை அதிகம் இருக்கிறது(10).
இருமலை நீக்கும் மஞ்சள்
என்ன தேவை
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பால் – 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
நல்ல சூடான பாலில் மஞ்சள் தூளை கலந்து பருக வேண்டும்.
எவ்வளவு முறை செய்யலாம்
நாளொன்றுக்கு இரண்டு முறை செய்து வரலாம்
எப்படி வேலை செய்கிறது
மஞ்சள் நம் முன்னோர்களின் அருமருந்து பொக்கிஷம். சமையல் முதல் உடல் சுத்தம் வரை மஞ்சளை அவர்கள் பல விதமாக பயன்படுத்தினர். காரணம் மஞ்சளில் குர்குமின், ஆன்டிபயாடிக், ஆன்டி பேக்டீரியல் எனப் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிகமாக இருப்பதாலேயே அது மருத்துவ உலகில் அமிர்தமாக இருக்கிறது.சூடான பாலுடன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தும் போது நுரையீரலில் தேங்கியுள்ள சளி ஜீரணமண்டலம் வழியாக வெளியேறுகிறது. உடனடியாக இருமல் நிற்கிறது (11).
இருமலை போக்கி இதமாக்கும் க்ரீன் டீ
உங்களுக்கு தேவையானது
க்ரீன் டீ பேக் அல்லது டீத்தூள் – 1 ஸ்பூன் அளவு
கொதிக்க வைத்த நீர் – 1 கப்
என்ன செய்ய வேண்டும்
நீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு க்ரீன் தேயிலைத் தூளை சேர்க்கவும். நன்றாக கொதிக்க விட்ட பிறகு குடிக்கும் சூட்டில் பருக வேண்டும். தேவையெனில் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.
எவ்வளவு முறை
நாளொன்றுக்கு 3 முதல் 4 முறை இருமல் போகும் வரை பருகலாம்.
எப்படி வேலை செய்கிறது
க்ரீன் டீ எடைக்குறைப்பு செய்வதற்கு மட்டும் அல்ல. சளி மற்றும் இருமலுக்கும் மருந்தாக விளங்குகிறது(12). க்ரீன் டீயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொண்டையில் உள்ள புண்களை ஆற்றுவதில் உதவுகிறது. கேம்லியா சினென்சிஸ் தாவரத்தில் இருந்து க்ரீன் டீ தயார் ஆகிறது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், பாலிபினால்கள் போன்றவை உங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவி செய்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பானது தொண்டையில் உள்ள புண்களை ஆற்றி இருமலை அறவே ஒழித்து விடுகிறது
Shutterstock
பலமான இருமலையும் பறந்து போக செய்யும் பட்டை
உங்களுக்கு தேவையானது
பட்டை – சிறிய அளவு
நீர் – 1 கப்
என்ன செய்ய வேண்டும்
நீரில் சிறிதளவு பட்டையை சேர்த்து கொதிக்க விடவும். அல்லது லவங்க பட்டையை பொடி செய்து கொதிக்கும் நீரில் சேர்க்கலாம்.பின் குடிக்கும் சூட்டில் பருகவும்.
எவ்வளவு முறை செய்யலாம்.
நாளொன்றுக்கு இரண்டு முறை செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
நல்ல மணம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் பட்டையில் இருக்கிறது. லவங்கப்பட்டை எனப்படும் பட்டையில் பாலிபினால்கள் அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் ப்ரோஅந்தோசையனிடின் இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது(13). பட்டையில் உள்ள ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மைகள் (14) மூச்சு குழாய் பிரச்னைகள், மூச்சு திணறல், இதயநோய் மற்றும் இருமலை நீக்குகிறது.
எத்தகைய இருமலையும் சரியாக்கும் எலுமிச்சை
உங்களுக்கு தேவையானது
எலுமிச்சை ரசம் – இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள்
தேன் – 1 ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன்
பட்டை தூள் – சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
தேனை லேசாக சூடாக்கி அதனுடன் எலுமிச்சை மற்றும் பட்டை கலக்க வேண்டும்.உடன் சிறிது வெந்நீர் சேர்த்து பருகி வர சளி மற்றும் இருமல் சரியாகி விடும்.
எப்படி வேலை செய்கிறது
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதனால் சளி மற்றும் இருமலை உண்டாக்கும் கிருமிகளை நீக்குகிறது. ஆகவே சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது
இருமலைக் குறைக்கும் வெல்லம்
உங்களுக்கு தேவையானது
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
என்ன செய்ய வேண்டும்
அந்த சிறிய துண்டு வெல்லத்தை வாயில் போட்டு மிட்டாய் போல உண்ணவும்.
எவ்வளவு முறை நீங்கள் இதை செய்யலாம்
எப்போதெல்லாம் இருமல் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி இது வேலை செய்கிறது
இருமும்போது ஏற்படுகின்ற தொண்டை அழற்சி மற்றும் புண்களை குணப்படுத்தி இதமாக்கும் ஆற்றல் வெல்லத்திற்கு இருக்கிறது.
இருமலை அடக்கும் நெல்லிக்காய்
உங்களுக்கு தேவையானவை
நெல்லிகாய் சாறு – 1 கப்
மிளகு தூள் – சிறிதளவு
தேன் – ஒரு ஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்
நெல்லிக்காய் சாறில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
எவ்வளவு முறை
ஒரு நாளைக்கு 1-2 முறை குடிக்கலாம்.
எப்படி வேலை செய்கிறது
நெல்லிக்காய் இந்தியாவின் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று. புளிப்பு இனிப்பு துவர்ப்பு என பல சுவைகள் இதில் உள்ளது. காய்ச்சலடக்கும் தன்மை கொண்டது நெல்லிக்காய். கூடவே சளி மற்றும் இருமலை அடக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீக்கும் ஓமம்
உங்களுக்கு தேவையானது
ஓமம் பொடி -1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
பனங்கற்கண்டு – 1/2 ஸ்பூன்
மிளகு பொடி – 1/4 ஸ்பூன்
பால் – 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
சூடான பாலில் மேற்கண்ட பொடிகளை கலந்து குடிக்கவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
தினமும் இரண்டு முறை பருகலாம்
எப்படி வேலை செய்கிறது
ஓமத்தில் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்க்கும் பண்பு அதிகமாக இருக்கிறது. அழற்சி எதிர்ப்பாகவும் ஓமம் செயல்படுகிறது(16). ஆகவே இருமல் நேரங்களில் தொண்டையில் ஏற்படும் அழற்சிக்கு இதமளித்து இருமலை உண்டாக்கும் கிருமிகளை வேரோடு அழிக்கிறது ஓமம்.
இருமல் வராமல் காக்க சில முக்கியமான குறிப்புகள் – Prevention Tips For Cough in Tamil
Shutterstock
- இருமல் ஏற்படாமல் இருக்க நீங்கள் முக்கியமாக மிக குளிர்ந்த நிலையில் உள்ள பானங்களை பருகக்கூடாது.
- அடிக்கடி நீர் குடித்துக் கொண்டே இருப்பது உங்களை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கும்
- பால் மற்றும் பால் சம்பந்தமான பொருள்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. அல்லது குறைத்து கொள்ளலாம்.
- ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளான ஈஸ்ட், நட்ஸ், சில மீன் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்
- வெண்மை நிற பிரட் மற்றும் வெண்மை நிற பாஸ்தா வகையை தவிர்க்க வேண்டும்.
- தினமும் நன்றாக ஓய்வெடுப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உறங்கும்போது உடல் சைடோகைன்களை வெளிப்படுத்தும். அது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
- வைட்டமின் D குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளும். சூரிய வெளிச்சம் காலை 6 முதல் 7 வரை உங்கள் மீது படும்படி இருந்தால் போதுமானது.
- மழை நேரங்களில் சளி பிடித்தால் உடனடியாக அதற்கான தீர்வுகளை தேடுங்கள். சளி அதிகரிக்கும்போது இருமல் சேர்ந்து கொள்ளும் அபாயம் உண்டு.
- மழைக்காலங்களில் அடிக்கடி பால் கலக்காத லெமன் டீ ப்ளாக் டீ போன்றவற்றை பருகுவது உங்கள் தொண்டைக்கு இதமளித்து அங்குள்ள சளியைக் கரைத்து விடும்.
- சுத்தமான ஆடை, உடல் குளியல் என உங்களை பரிசுத்தமாக்கியபடி இருப்பது நோய்க்கிருமிகளை உங்களை அண்டவிடாமல் தடுக்கும் வழியாகும்.
இறுதியாக
இருமல் நேரங்களில் முடிந்தவரை மற்றவரின் அருகாமையில் இருந்து விலகி இருங்கள். இருமல் வந்தால் முடிந்தவரை கைகளால் வாயை மூடியபடி இருமலாம். வெறும் இருமல் தானே என்று கவனமின்றி அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு வாரத்துக்கு பின்பான இருமல் என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். மேலே கொடுக்கப்பட்ட இயற்கை வீட்டு வைத்திய முறையை பின்பற்றி இருமல் நேரங்களை இதமாக்கி கொள்ளுங்கள். இருமல் பற்றிய தீர்வுகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்