สารบัญ:
- உடல்எடையைகுறைப்பதுஎப்படி? - วิธีลดน้ำหนักในภาษาทมิฬ
- 1. சமையலறைமாற்றியமைப்பு
- 2. காலையில்வெந்தயநீரைஅருந்துங்கள்
- 3. கிரீன்டீபருகுங்கள்
- 4. சமநிலை கொண்ட உணவுகளைஉண்ணுங்கள்!
- 5. மெதுவாகமென்றுவிழுங்குங்கள்
- 6. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களை உட்கொள்ளுங்கள்
- 7. ஒவ்வொரு உணவுடனும்புரதத்தை உட்கொள்ளுங்கள்
- 8. ஒருநாளை ஏமாற்றிக்கொள்ளலாம்!
- 9. பாக்கெட்டில்அடைக்கப்பட்டபானங்களைதவிருங்கள்!
- 10. அதிகம்சமைப்பதைதவிருங்கள்!
- 11. இரவுஉணவை 7:30 மணிக்குமுன் உட்கொள்ளுங்கள்
- 12. உணவின்மீதுகவனம்செலுத்துங்கள்
- 13. நீர்ச்சத்துடன்உடலைவைத்திருங்கள்
- 14. உங்கள்காலடிகளைஎண்ணுங்கள்!
- 15. அதிகம்சிரியுங்கள்!
- 16. ஜங்க் ஃபுட் எனும் துரித உணவு தீனிகளை தவிருங்கள்
- 17. உறக்கம்
- 18. தியானம்
- 19. உத்வேக கவிதைகளை சுவரில் ஒட்டிக்கொள்ளுங்கள்
- உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை குறிப்புகள் – Diet for Weight Loss in Tamil
- உடல் எடை இழப்பு ஏற்பட டயட் என்பது அவசியமா?
- உங்களுக்கான டயட் என்னெவென்று தெரிந்து கொள்ளுங்கள்!
- விரதத்தை உடைத்து, உண்ணுங்கள்..!
- உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள் – Workout for Weight Loss in Tamil
- உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
விரும்பியஉணவுகளைஎல்லாம்உண்டு, உடலில்காணப்படும் கொழுப்பை எரித்து, உடல்எடையைகுறைக்கமுடியும்என்றால்உங்களால்நம்பமுடிகிறதா? அதுவும்வீட்டிலிருந்தேஎடைஇழப்புசெய்யமுடியும்என்றால்அதுசாத்தியமானகாரியமாக தோன்றுகிறதா? ஆம்எல்லாம்சாத்தியம்தான், இதைநீங்கள்முற்றிலுமாகநம்பவேண்டும்எனில், இப்பதிப்பினைமுழுமையாகபடிக்கவேண்டும்.
இந்தபதிப்பில்வழங்கப்பட்டுஇருக்கும்எளியஎடைஇழப்புகுறிப்புகள், ஜிம்மிற்குசெல்லாமல்வீட்டிலிருந்தேஉடல்எடையைகுறைக்கமுடியும்என்றநம்பிக்கையைஉங்கள்மனதில்ஏற்படுத்தும் உடல்எடைகுறைப்புஎன்பதுஒன்றும்செயற்கரியசெயல்அல்ல; அதற்கானவழிகளும்பெரும்இரகசியம்அல்ல. ஆகையால், எப்படிஉடல்எடையைகுறைக்க போகிறோம்? என்று யோசித்துக் கொண்டே இருக்காமல், பதிப்புமுழுதையும்படித்து, படித்ததைசெயல்படுத்த தொடங்குங்கள்! வாருங்கள், பதிப்பிற்குள்செல்லலாம்.
உடல்எடையைகுறைப்பதுஎப்படி? - วิธีลดน้ำหนักในภาษาทมิฬ
உடல்எடைஇழப்புஎன்பதுதானாகநடைபெறாது; அதுநிகழநாம்சிலமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதுஅவசியம். உடல்எடையைகுறைப்பதுஎப்படிமற்றும்உடல்எடையைகுறைக்கஉதவும்குறிப்புகள்என்னென்னஎன்றும்பார்க்கலாம்
1. சமையலறைமாற்றியமைப்பு
சமையலறையில்சிலமாற்றங்களைகண்டிப்பாகசெய்தால்மட்டுமே, ஒருவரால்உடல்எடைஇழப்பில்முன்னேற்றங்களைபார்க்கமுடியும். சமையலறையில்சேமித்துவைத்திருக்கும்துரிதஉணவுவகைகள், அதிகஉப்புச்சத்து கொண்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்டசர்க்கரை, பால்சாக்லேட்கள்மற்றும்அதீதஅளவில்சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் போன்றவற்றை முதலில்அகற்றவேண்டும்; இவற்றிற்குமாற்றாகபழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், முழு கோதுமை பிரட்மற்றும்லீன்புரதம்நிறைந்தஉணவுகளைசமையலறைமற்றும்குளிர்சாதனபெட்டியில்நிரப்பி, அவற்றையேஅன்றாடம் உட்கொள்ள வேண்டும்
2. காலையில்வெந்தயநீரைஅருந்துங்கள்
பொதுவாக காலைவேளையில் எல்லோரும் அருந்தும்குளிர்ந்தநீர்அல்லதுதேன்மற்றும்எலுமிச்சைசேர்த்தசுடுநீரைபருககூடாது; அதற்குபதிலாகமுதல்நாள்இரவுதூங்கசெல்லும்முன்னர், இரண்டுதேக்கரண்டிவெந்தயவிதைகளைநீரில்ஊறவைத்துஅடுத்தநாள்காலைவெந்தயம்ஊறியஅந்நீரை, விதைகளைவிலக்கிபருகவேண்டும் வெந்தயவிதைகள்உடலின்வளர்சிதைமாற்றத்தைஅதிகரித்து, நாள்முழுவதும்உடலைசுறுசுறுப்பாகவைத்திருக்கஉதவுகின்றன; மேலும்நீர்உடலில்உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றஉதவுகிறது.
3. கிரீன்டீபருகுங்கள்
கிரீன்டீஎன்பதுஉடலின்வளர்சிதைமாற்றத்தைஅதிகரிக்கும்சிறந்தபானம்ஆகும்; இதில்உள்ள EGCG எனும்ஆன்டிஆக்சிடென்ட், உடலில்காணப்படும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தஉதவுகிறது. தொடர்ந்து ஒருவாரத்திற்குகிரீன்டீபருகுவது, 400 கலோரிகளை எரிக்கஉதவும்.
4. சமநிலை கொண்ட உணவுகளைஉண்ணுங்கள்!
தினசரிஉண்ணும்உணவில்புரதம், நல்ல கார்போஹைட்ரேட்கள் (பழங்கள் / காய்கறிகள் / தானியங்கள்) போன்றவை இடம்பெறுமாறுபார்த்துக் கொள்ள வேண்டும்; இது போன்ற சமநிலை கொண்ட, சரிவிகிதசத்துக்கள்நிறைந்தஉணவுகளை உட்கொள்ளும் பொழுது, உடலால்சரிவரஇயங்கமுடியும்; மேலும்இதுஉடலின்ஆற்றலைஅதிகரித்து, நச்சுக்களைநீக்கி, நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரித்துஉடலின்ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த
5. மெதுவாகமென்றுவிழுங்குங்கள்
உட்கொள்ளும் உணவைநன்றாகமென்று, உமிழ்நீருடன்சேர்த்துவிழுங்கினால்நம்மால்உடலுக்குதேவையான கலோரிகள் கொண்ட குறைந்தஅளவுஉணவைமட்டுமேஉண்ணமுடியும்என்றுபலஆய்வறிக்கைகள்கருத்துதெரிவிக்கின்றன மெதுவாகமென்றுஉண்பதுஅதிகம் உட்கொள்ளும் சூழலைதவிர்த்து, வயிறுநிரம்பியதகவலைமூளைக்குஅனுப்பிநம்மைஅதிகம்உண்ணவிடாமல்தடுக்கிறது மேலும்இதுசெரிமானத்திற்குஉதவி, உட்கொள்ளும் உணவின்அளவைகுறைக்கஉதவுகிறது. ஆகவேஒருவாய்உணவை 35 முதல் 50 முறைகள்நன்குமென்றபின்னர்விழுங்கவேண்டும்
6. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்களை உட்கொள்ளுங்கள்
சாதாரணஉணவு பொருட்களை விட, கலோரிகள் குறைந்தஉணவுவகைகளானபழங்கள், காய்கறிகளைஅதிகம் உட்கொள்ள வேண்டும்; தினந்தோறும் வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், நார்ச்சத்து, பைட்டோ ஊட்டச்சத்துக்கள்நிறைந்தஐந்துவெவ்வேறுகாய்கறிகளையும், மூன்றுவேறுபட்டபழங்களையும் உட்கொள்ள வேண்டும் மேலும்நாம், நமதுஅன்றாடஉணவுமுறையில்முழுதானியவகையைசேர்ந்த பிரௌன் அரிசி, பிரான்ஃபிளேக்ஸ் (சோள சீவல்கள்), பாப்கார்ன், பார்லிமற்றும் சோளம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முயலவேண்டும்; இவ்வுணவுகள்உடலைஅதிகநேரம்பசியின்றிவைத்திருந்து, உடலுக்குதேவையானநார்ச்சத்தையும்வழங்குகின்றன.
7. ஒவ்வொரு உணவுடனும்புரதத்தை உட்கொள்ளுங்கள்
லீன்புரதம்எனும் கொழுப்பற்ற, கலோரி குறைந்தபுரதவகையை, அன்றாடம்எல்லாஉணவுகளிலும்சேர்த்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். இவ்வாறுபுரதத்தைஉணவில்சேர்த்துக் கொள்வது நீண்டநேரம்பசிஎடுக்காமல்பார்த்துக் கொள்ளும் மற்றும்அதிகம்நாம்அதிகம்உண்ணாமலும்பார்த்துக் கொள்ளும்; முடிந்தஅளவு நொறுக்குத்தீனிகளில் கூடலீன்புரதத்தைசேர்த்துக் கொள்வது மேலும்நன்மைபயக்கும் உணவுமுறையில் யோகர்ட், கடலைகள், நிலக்கடலைவெண்ணெய், முட்டை, பீன்ஸ்மற்றும் கொழுப்பற்ற வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்
8. ஒருநாளை ஏமாற்றிக்கொள்ளலாம்!
உடல்எடைஇழப்புமுறையைபின்பற்றிவரும் பொழுது, மிகவும்கட்டுப்பாட்டுடன்உணவுமற்றும்உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள்ஏதேனும்ஒருநாளில்தனக்குவகைஉணவுகளை உட்கொண்டு அந்தநாளில் சந்தோஷமாக, உல்லாசமாகஇருந்து கொள்ளலாம்; இவ்வாறுஒருநாளைஏமாற்றி சந்தோஷமாக இருப்பதுதவறுஅல்ல. ஆனால், இந்ததவறுஎல்லைமீறாமல்பார்த்துக் கொள்ள வேண்டியதுஅவசியம்; அதாவதுஇவ்வாறுஒருஏமாற்றுதினத்தை மேற்கொள்ளும் பொழுது வழக்கத்தைவிட 500 கலோரிகள் அதிகமாக, பிடித்தஉணவுகளை உட்கொண்டு மகிழலாம் உட்கொள்ளும் 500 கலோரிகளை தாண்டினால், கூடியஉடல்எடையைகுறைக்கநீங்கள்தான்அதிகம்மெனக்கெடவேண்டியிருக்கும் உடலின்வளர்சிதைமாற்றம்அசாதாரணநிலையைஅடைந்துவிடாமல்இருக்கஇந்தஏமாற்றுநாள்உதவும் ஏமாற்றுநாள்என்றபழக்கத்தை மேற்கொள்வது, உடலின்வளர்சிதைமாற்றம்மற்றும்உடல்செல்களைசுறுசுறுப்பாகவைத்துஉதவும்
9. பாக்கெட்டில்அடைக்கப்பட்டபானங்களைதவிருங்கள்!
பாக்கெட்டில்அடைக்கப்பட்டபழச்சாறுகள், காய்கறிசாறுகள், ஆற்றல்பானங்கள், சோடா, ஜீரோ கலோரி சோடா போன்றவை உடல்எடைஇழப்பை தாமதப்படுத்துவதோடு, உடலின் ஆரோக்கியத்தையும் அபாயத்தில்ஆழ்த்திவிடுகிறது ஜீரோ கலோரி என்றுகூறிவிளம்பரப்படுத்திவிற்றாலும், இஜ்ஜீரோ கலோரி சோடாக்களில் சேர்க்கப்படும்செயற்கை பொருட்கள் அவற்றைசாதாரணபானத்தைவிடமிக மோசமானதாக மாற்றிவிடுகின்றன சாதாரண சோடாக்களில் சேர்க்கப்படும்சுத்திகரிக்கப்பட்டசர்க்கரையின்அளவுமிகவும்அதிகம்மற்றும்இவற்றைஅதிகம்பருகினால்உடலில்சர்க்கரைஏற்படுத்திவிடும்
புதிதாகதயாரிக்கப்பட்டஅல்லதுசுகாதாரமானமுறையில்சேமிக்கப்பட்டபழச்சாறுகள், காய்கறிசாறுகளைபருகலாம்; மேலும்வீட்டிலேயேதினமும்ஒருவகைபழச்சாறுதயாரித்துபருகுவதுமிகவும்நல்லது
10. அதிகம்சமைப்பதைதவிருங்கள்!
உணவு பொருட்களை அதிகம்சமைத்தால்அதிலுள்ளஊட்டச்சத்துக்கள்நீங்கிவிடும்அபாயம்உண்டு; அதிகம்சமைக்கப்பட்டஉணவுகளை உட்கொண்டால் உடலுக்குதேவையானஊட்டச்சத்துக்கள்கிடைக்காமல், பசிஉணர்வுஏற்பட்டுநம்மைதுரிதஉணவுகளைஉண்ணத்தூண்டும் இதைதடுக்கவேண்டும்எனில், உணவு பொருட்களை அதிகம்சமைத்துசாப்பிடாமல், பச்சையாகவோ அல்லதுதேவையானஅளவு சமைத்தோ சாப்பிடவேண்டும். ஆவியில்வேகவைத்த, பேக்செய்யப்பட்ட, நெருப்பில்சுட்டகாய்களை, இறைச்சிகளை, மீன்களை உட்கொள்வது நல்லது; இவ்வுணவுகளுக்குசுவைசேர்க்க கலோரி குறைந்தமசாலாக்களைபயன்படுத்தலாம்.
11. இரவுஉணவை 7:30 மணிக்குமுன் உட்கொள்ளுங்கள்
இரவுதாமதமாக உட்கொண்டால் அதுஉடல்எடைஅதிகரிப்பைஏற்படுத்திவிடவாய்ப்புண்டு; பொதுவாகவே இரவுஉணவை 7:30 மணிக்குள்உண்டுமுடிக்கவேண்டியதுமிகமுக்கியம் மேலும்இரவுஉணவுக்குமுன் நொறுக்குத்தீனி உண்ணும்பழக்கத்தைதவிர்க்கவேண்டும்; இரவுஉணவுஉண்டுமுடித்தபின்மூலிகைதேநீர்குடிப்பதுநல்லது. மேலும்அதிகஉணவுஉண்பதைதடுக்க, இரவுஉணவுக்குபின்னர்பல்துலக்கிவிடவேண்டும்.
12. உணவின்மீதுகவனம்செலுத்துங்கள்
நம் முன்னோர்கள் சாப்பிடும் பொழுது பேசக்கூடாதுஎன்றுகூறநாம் கேட்டிருப்போம்; அதுகாரணமின்றிகூறப்பட்டகூற்றுஅல்ல. உணவுஉண்ணும் பொழுது பேசவோ, படிக்கவோ, தொலைக்காட்சி அல்லதுஅலைபேசி போன்றவற்றை பார்க்கவோ கூடாது; உணவுஉண்ணும் பொழுது பலவேலைகளைசெய்யாமல், பலவிஷயங்களில்கவனம்செலுத்தாமல்உணவின்மீதுமட்டும்கவனம்செலுத்தி உட்கொண்டால் அதுஉடல்எடையைஅதிகரிக்காமல்பார்த்துக் கொள்ள உதவும் உணவின்மீதுகவனம்செலுத்தி உட்கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
13. நீர்ச்சத்துடன்உடலைவைத்திருங்கள்
நம்மில் பெரும்பாலானோர் உடலுக்குதேவையானஅளவுநீரைவிடகுறைவானஅளவையேபருகி வருகிறோம்; ஓர்நாளைக்கு, ஒருமனிதஉடலின்சராசரியானநீர்த்தேவை 3 முதல் 4 லிட்டர்ஆகும். வேலைசெய்துஅதிகவியர்வைவெளியேறினால், நிச்சயம்அதிகஅளவுநீரைஅதாவது 4 முதல் 5 லிட்டர்நீரைஅருந்தவேண்டியதுமிகவும்அவசியம். உடலுக்குதேவையானஅளவுநீரைகுடிக்காவிட்டால்அதுபசிஉணர்வைஏற்படுத்திஅதிகஉணவைஉண்ணவைத்துவிடும்; மேலும் சோர்வையும் ஏற்படுத்திவிடும். சரியானஅளவுநீர்அருந்தாதது, உடலின்வளர்சிதைமாற்றத்தைநிறுத்தி - உடலில் கொழுப்பு இழப்பைதடுக்கிறது ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ள போதுமான அளவுநீரைஅருந்தவேண்டும்; ஆகவேதினமும்உடலுக்குதேவையானஅளவுநீரைகுடிக்கவேண்டும்என்பதைநினைவில்வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்
14. உங்கள்காலடிகளைஎண்ணுங்கள்!
வீட்டில்அல்லதுவெளியேஅல்லதுவேலைசெய்யும்இடத்தில்தினம்எத்தனைஅடிகளைஎடுத்துவைத்து நடக்கிறோம் என்றுஎண்ணிப்பார்த்ததுஎண்ணிப்பார்த்ததுஉண்டா? 15 முதல் 20 நிமிடங்களுக்குவிரைவாகநடப்பதுஉடலை ஆரோக்கியமாக வைத்திருக்கஉதவும்ஒருஎளியஉடற்பயிற்சிஆகும் அலுவலகத்தில், பள்ளியில்அல்லதுவீட்டில்எனஎங்கிருந்தாலும்தினமும்ஒருமணிநேரம்நடக்கமுயற்சியுங்கள்; அதிலும்காலையில்எழுந்தஉடன்நடப்பதுமிகவும்நல்லது. பக்கத்தில்இருக்கும்கடைகளுக்கு, அலுவலகத்திற்கு, பள்ளிக்குஎனதூரம்குறைவாகஇருக்கும்இடங்களுக்குநடந்தேசென்றுவேறமுயலுங்கள்; லிஃப்ட், எஸ்குலேட்டர் போன்ற இயந்திரங்களின்உதவியைநாடாமல், மாடிப்படிகளில்ஏறிஇறங்குங்கள். நீங்கள்வைக்கும்காலடிகளை ஒவ்வொரு நாளும்எண்ணி, நீங்கள்எரிக்கும் கலோரிகளை - உண்ணும்உணவின் கலோரிகளை கணக்கெடுத்தால், உடல்எடைகுறைப்புபயணத்தில்என்னநிகழ்கிறதுஎன்பதைநம்மால்கண்கூடகாண
15. அதிகம்சிரியுங்கள்!
டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், சிரிப்பு என்பது எடை இழப்பை ஏற்படுத்த உதவும் ஒரு மிகச்சிறந்த வழியாக கருதப்படுகிறது. வாய்விட்டு சிரிப்பது இதயத்துடிப்பை அதிகரித்து, உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி, அடிவயிற்று தசைகளை கட்சிதமாக்க உதவும்; இது ஒரு இயற்கையான கார்டியோ பயிற்சி ஆகும். ரோவிங் இயந்திரத்தில் (rowing machine) 10 நிமிடங்கள் நேரம் செலவிடுவதை விட, தினமும் 5 முறை நன்கு வாய்விட்டு சிரிப்பது அதிக பலனை அளிக்கும். நன்கு, சத்தமாக 10 முதல் 15 முறை சிரித்தால், எளிதாக 50 கலோரிகளை எரித்து விடலாம்; இவ்வாறு தொடர்ந்து செய்வது ஒரு வருடத்திற்கு 4.4 பவுண்ட் எடையை இழக்க முடியும்.
16. ஜங்க் ஃபுட் எனும் துரித உணவு தீனிகளை தவிருங்கள்
நம் அனைவருக்குமே தீனிகள் அதிலும் நொறுக்குத்தீனிகள் என்றால் மிகவும் பிரியமான ஒன்று; ஆனால் எந்த ஒரு தீனி உணவும் குறைவான அல்லது ஜீரோ கலோரிகளை கொண்டிருப்பதில்லை. கலோரி மிகுந்த துரித உணவுகளை தவிர்த்து, பிஞ்சு கேரட், பிஞ்சு பீட்ரூட், பிஞ்சு வெள்ளரி, பழங்கள், ஒரு கை நிறைய நிலக்கடலை அல்லது பிஸ்தா பருப்புகள், பாப்கார்ன் போன்ற பல ஆரோக்கியம் தரும் உணவுகளை தீனிகளாக உட்கொள்ளலாம். கலோரி குறைந்த, ஊட்டச்சத்து மிகுந்த தீனிகளை உட்கொண்டால் அது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும்.
17. உறக்கம்
உடல் எடையை எளிதில் குறைக்க வேண்டுமெனில், சரியான நேரத்திற்கு முறையாக உறங்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் உறங்கும் பொழுது கூட, நமது உடல் ஓயாது உழைத்து, உடலின் காயங்களை குணப்படுத்தி, சேதங்களை சரி செய்ய முயற்சித்து கொண்டிருக்கும். உணவை செரிக்க, கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை நிகழ்த்த, கொழுப்புகளை உடைக்க செரிமான உறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும். இன்சுலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தூக்க முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் என்பது சர்க்கரை, கொழுப்பு, புரதம், தாதுச்சத்துக்கள், நீர் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை சரிப்படுத்த மற்றும் இன்சுலின் ஹார்மோன் இரத்த சர்க்கரை, கொழுப்பு சேமிப்பு போன்றவற்றை சரிப்படுத்த உதவும் ஹார்மோன்களாக விளங்குகின்றன. முறையற்ற உறக்கம் கார்டிசோல், இன்சுலின் ஹார்மோன்களை அதிகரித்து, உடல் எடை குறைப்பை ஒரு பெரும் சவாலாக்கிவிடும் வகையில் விளங்குகிறது. ஆகவே இரவு சரியான நேரத்திற்கு முறையாக உறங்கி ஓய்வெடுங்கள்.
18. தியானம்
உடலில் கொழுப்பை சேர்க்கும் முக்கிய காரணியாக திகழ்வது மன அழுத்தம் ஆகும்; கவலைப்படுதல், மன அழுத்தம், அழுத்தம் மற்றும் எதிர்மறை உணர்வுகள் போன்றவை கார்டிசோல் எனும் அழுத்த ஹார்மோனின் அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்க காரணமாகி விடலாம். இது அழற்சி, தீங்கு விளைவிக்கக்கூடிய தேவையற்ற ஆக்சிஜன் செல்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் சேரவைத்து உடல் செயல்பாட்டை மெதுவாக்கி விடும். ஆகவே, இத்தகைய மோசமான உணர்வை தவிர்க்க, ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதுமானது. ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம்; ஆனால், இதை தொடர்ந்து செய்தால் நேர்மறை எண்ணங்களும் நல்ல அலைகளும் நம்மைச் சுற்றி எழும் என்பதில் ஐயமே இல்லை.
19. உத்வேக கவிதைகளை சுவரில் ஒட்டிக்கொள்ளுங்கள்
வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க உத்வேகத்துடன் இருக்க வேண்டியது அவசியம்; அதுவும் டயட் முறையை மேற்கொள்ளாமல் எடையை குறைக்க நிச்சயம் உத்வேகம் அவசியம். அதிலும் நீங்கள் ஒரு உணவு பிரியராக இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை அளவோடு உண்ணத் தேவையான உத்வேகத்தை கொண்டிருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை சோர்வு ஏற்படுத்தும் விஷயமாக கருதாமல் அதை உற்சாகத்துடன் மேற்கொள்ளுங்கள்; இவ்வாறு தினந்தோறும், ஒவ்வொரு செயலையும் செய்வதில் உத்வேகத்துடன் இருக்க, சுவரில் உத்வேகம் கொடுக்கும் பிடித்தமான கவிதைகளை எடுத்து, வீட்டின் சுவரில் அடிக்கடி கண்ணில் படும்வகையில் ஒட்டி வைத்துக் கொள்ளவும். அலுவலகத்தில் கூட உங்களது இருக்கையில் உத்வேகத்தை கைவிடாமல் வைத்திருக்க உதவும் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு, தினமும் நேரம் இருக்கும் போதெல்லாம் அதை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த முறையை இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு மேற்கொண்டால், அதன் பின் எதையும் எழுதி ஒட்டி வைத்து பார்க்காமலேயே, உங்களால் உத்வேகத்துடன், உற்சாகத்துடன் இருக்க முடியும்; இது ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை குறிப்புகள் – Diet for Weight Loss in Tamil
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இக்காலத்தில் டயட் என்று மாடர்ன் பெயரை உணவு முறைக்கு கொடுத்து, எளிய உணவுகளை கூட கடினமான முறையில் தயாரித்து உண்ணும் அவல நிலை நிலவுகிறது. இந்த பத்தியில் உடல் எடையை குறைக்க உதவும் உணவு முறை குறிப்புகள் பற்றி படித்து அறியலாம்.
உடல் எடை இழப்பு ஏற்பட டயட் என்பது அவசியமா?
டயட் எனும் வார்த்தைக்கு இந்த நவீன உலகம் ஒரு புது சாயலை பூசி, அதை ஒரு ஆடம்பரமான, அலட்டலான செயலாக மாற்றிவிட்டது; மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எல்லாம் டயட் என்னும் ஒரு வழிமுறையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது. உண்மையில் டயட் என்பது ஒரு எளிய உணவு முறையை மட்டுமே குறிக்கிறது; வழக்கமாக மேற்கொள்ளும் உணவு முறையையே குறைவான அளவில் அதாவது குறைந்த கலோரி அளவில் சரிவிகித சத்துக்களை கொண்ட உணவாக உட்கொண்டாலே போதுமானது. இவ்வாறு செய்து வந்தால் உடல் எடை இழப்பு மிக எளிதாக நிகழ்ந்து விடும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு உடல் எடையை குறைப்பதை விட வேறொரு முட்டாள்தனம் இல்லை, ஏன் தெரியுமா? ஒவ்வொருவரின் உடல் நிலையும் வேறுபட்டது; உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், உங்களது உணவு முறை, வாழ்க்கை முறையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. டயட் எனும் பெயர் கொண்டு உணவு முறையில் அதீத கட்டுப்பாடுகளை விதிக்காமல், எளிதாக – வழக்கமான உணவு முறையை அளவாக, ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் வீட்டிலிருந்தே உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம்.
உங்களுக்கான டயட் என்னெவென்று தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் நண்பருக்கு ஒரு வகையான டயட் முறை பலனளித்து இருந்தால், அது உங்களுக்கும் அதே பலனை வழங்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்; மேலும் உங்களது உடலின் செயல்பாடு, இயக்கம் இவற்றிற்கு ஏற்ற, உங்களின் வழக்கத்தை ஒத்த எளிய உணவு முறையை மேற்கோள்ள முயற்சியுங்கள். உடல் எடை இழப்பு ஏற்பட, அதற்கு மனதில் உத்வேகம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் எடையை இழக்க, குறைந்த உணவுகளை உண்டு அல்லது உடலின் நீர்ச்சத்தை வெளியேற்றி உடல் எடையின் அளவை குறைத்தால், நிச்சயமாக அதன் பின் விளைவுகள் பயங்கரமான ஆரோக்கிய சீர்கேடை உடலில் ஏற்படுத்தி விடலாம்.
அதுவே ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சித்தால், அது உடல் எடை இழப்பை ஏற்படுத்துவதோடு அவையே வாழ்க்கையில் நாள்பட்ட பழக்கமாக மாறிவிடும். வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக, எளியதாக, தேவையற்றவை இல்லாததாக மேற்கொண்டால், எடையை இழக்க டயட் என்ற ஒன்று தேவையே படாது!
விரதத்தை உடைத்து, உண்ணுங்கள்..!
நம்மில் பலர் காலை உணவை தவிர்த்து விட்டால், கலோரி அளவுகளை குறைத்து உடல் எடையை குறைத்து விடலாம் என்ற தவறான விஷயத்தை உண்மை என நம்பிக்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் முக்கியமாக உட்கொள்ள வேண்டிய ஒரு உணவு, காலை உணவு ஆகும்; அதை ஒருபோதும் தவிர்க்கவோ, சாப்பிடாமல் தள்ளி வைக்கவோ கூடாது. ஒரு நாளில் ஒரு சில முறைகள் உணவு உட்கொண்டு உடலை இயக்கத்தில் வைக்க வேண்டியது அவசியம்; நீங்கள் காலை உணவை தவிர்த்தால், மதிய நேரத்தில் வழக்கத்தை விட அதிகமான பசி உணர்வு ஏற்பட்டு உங்களை அதிகம் உணவு உண்ண வைத்துவிடும். இது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துவிடும்; மேலும் காலை உணவை தவிர்த்தால் அது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மெதுவானதாக்கி விடும். ஒரு கிண்ணம் நிறைய முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்களை காலை உணவாக எடுத்துக் கொண்டு நம் நாளை தொடங்கலாம்.
உடல் எடையை இழக்க, உங்களை நீங்களே பட்டினி போடுகிறீர்களா? இனி இந்த நிலை தேவையில்லை. இவ்வாறு செய்தால் உடலில் நீரின் அளவு குறைந்து எடையும் குறைவது போன்று தோன்றலாம், ஆனால் குறைந்த வேகத்தில் உடல் எடை மிகவும் அதிகரித்து விடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, எளிய வாழ்க்கை முறையை பின்பற்றினாலே எளிதில் எடையை குறைத்து விடலாம். எடையை குறைக்க உதவும் குறிப்புகளில் இதுவே மிக முக்கியமானது; முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், லீன் இறைச்சிகள், ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவ்வாறு சேர்த்து கொள்ளும் உணவுகளை ஒரே நேரத்தில் அதிக அளவு உட்கொள்ளாமல், குறைவான அளவில் 5 முதல் 6 முறைகள் மெதுவாக நன்கு மென்று உட்கொண்டால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள் – Workout for Weight Loss in Tamil
ஜிம்மிற்கு போய் உடல் எடையை குறைக்க விருப்பமில்லையா? ஜிம்மிற்கு சென்று தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றில்லை; மனதிற்கு பிடித்த பாடல்களுக்கு நடமானடியே எளிதில் எடை இழப்பை ஏற்படுத்தி விடலாம். உடலை சோர்வாக்கி விடாமல், உடலை இலேசாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்தே உடல் எடை இழப்பை சாதித்து விடலாம். சுறுசுறுப்புடன் நடத்தல், நாய் போன்ற செல்லப்பிராணிகள், குழந்தைகளுடன் சேர்ந்து நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் பயணம் மேற்கொள்ளுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை, நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் செய்தாலே உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம். எந்த ஒரு உடற்பயிற்சியையும் மெதுவாக செய்ய தொடங்கி, மனம் மற்றும் உடலை மெதுவாக தயார் செய்து 100 சதவிகித அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 60 நிமிடங்களை செலவு செய்து உடற்பயிற்சி செய்தாலே போதும்; இந்த செயலை பிடித்து செய்தால் அதை செய்யும் ஆர்வம் மனதில் மேலோங்கி விடும்.
உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், பொதுவாகவே உடலின் மீது பாசத்தை காட்டினால் அது நிச்சயம் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, சில காலத்திற்கு மட்டும் உடலின் மீது அக்கறை இருப்பது போல் நடந்து கொண்டால் அது நிச்சயம் நீண்ட காலத்திற்கான பலனை நல்காது. உடலின் மீது அக்கறை இருந்தால் அதை அனுதினமும் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, பழக்கங்களை மேற்கொண்டு, உடலை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களது உடல் ஆரோக்கியமாக மற்றும் கட்டுக்கோப்பாக இருப்பது போல் தோன்றினால், நீங்கள் உடல் எடையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் இதுவே உங்களது மனம் மற்றும் உடல் நலம் சரியாக இல்லை எனில், கண்டிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளை தவிர்க்க, நேர்மறையான பழக்கங்களை மேற்கொண்டு உடலின் மீது அக்கறை செலுத்தி வாழ்ந்தால், உடல் எடையை குறைக்க வேண்டிய நிலையே ஏற்படாது.
டயட் முறையை மேற்கொள்ளாமல், எளிய – வழக்கமான உணவு முறையை பயன்படுத்தி, வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்க, இயற்கையான முறையில் எடை இழப்பு ஏற்பட தேவையான எல்லா குறிப்புகளையும் இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்; இவற்றை நடைமுறை வாழ்வில் நடைமுறைப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்! வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்.!