สารบัญ:
- அத்திப்பழத்தின்வகைகள்
- அத்திப்பழத்தின்நன்மைகள்
- அத்திப்பழம்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்
- நன்மை 1: செரிமானம்
- நன்மை 2: இதய ஆரோக்கியம்
- நன்மை 3: உடல்எடைகுறைத்தல்
- நன்மை 4: கொலஸ்ட்ரால்
- நன்மை 5: இரத்த சோகை
- நன்மை 6: நீரிழிவு நோய் / சர்க்கரை நோய்
- நன்மை 7: புற்றுநோய்
- நன்மை 8: எலும்புகளைபலப்படுத்தும்
- நன்மை 9: ஆஸ்துமா
- நன்மை 10: இரத்தஅழுத்தம்
- วันที่ 11: ஆன்டிஆக்சிடென்ட்
- நன்மை 12: பாலியல்திண்மை
- วันที่ 13: தொண்டை புண்
- நன்மை 14: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
- நன்மை 15: ஆற்றலின்ஆதாரம்
- நன்மை 16: மலச்சிக்கல்
- அத்திப்பழம் தரும் சரும நன்மைகள்
- நன்மை 1: சுருக்கங்கள்
- நன்மை 2: கொப்புளங்கள் & மருக்கள் (பாலுண்ணி)
- நன்மை 3: சருமத்தை புத்துணர்வாக்கும்/ சருமத்தை மென்மையாக்கி, மிருதுவாக்கும்
- அத்திப்பழம் அளிக்கும் தலைமுடி நன்மைகள்
- நன்மை 1: முடி வளர்ச்சி
- நன்மை 2: தலைமுடியை நிலைப்படுத்தும்
- அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு
- அத்திப்பழத்தை பயன்படுத்துவது எப்படி?
- சில முக்கிய குறிப்புகள்:
- அத்திப்பழத்தை சேமித்து வைப்பது எப்படி?
- அத்திப்பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்
மனிதர்களால்பழங்காலத்தில்இருந்தே உட்கொள்ளப்பட்டு வரும்ஒருமுக்கியமானபழவகைஅத்திபழங்கள்ஆகும் பைபிளில்வரும்ஆதாம் - ஏவாள்கதையில், ஏவாள்பறித்துஉண்டபழம்ஆப்பிள்அல்ல, அதுஅத்திப்பழம்தான்என்றுபலரும்இன்றுவரைநம்பிக் கொண்டு இருக்கின்றனர் இதுவிசித்திரமாகஇருக்கிறதுஅல்லவா! உலகஅழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும்விருப்பமானஒருபழம் - அத்திப்பழம்என்றுநீங்கள்அறிவீரா?
இன்னும்எத்தனை எத்தனையோ கதைகள்மற்றும்அறியப்படாததகவல்களைஉள்ளடக்கி கொண்டு இருக்கிறதுஇந்தஅத்திப்பழம் அத்திப்பழம்குறித்தஎல்லாவிதசுவாரசியமானகதைகளையும், அதுதரும்நன்மைகள், பயன்கள்எனஎல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இப்பதிப்பில்படிக்கலாம், வாருங்கள்.. !
அத்திப்பழத்தின்வகைகள்
பொதுவாக அத்திபழம்ஐந்துவகைப்படும்; ஒவ்வொரு அத்திப்பழவகையும்சுவையிலும், குணத்திலும்மாறுபட்டுகாணப்படுகிறது. அத்திப்பழத்தின்வகைகள்என்னென்னஎன்றுஇங்குகாணலாம்:
- பிளாக் மிஷன் - பிளாக்மிஷன்அத்திபழங்கள், வெளிப்புறத்தில்கருப்புகலந்தஊதா (பர்ப்பிள்) நிறத்திலும், உட்புறத்தில்பிங்க்நிறத்திலும்இருக்கும் இவைநம்பமுடியாதவகையில்அதீதஇனிப்புமற்றும்சிரப் போன்ற தன்மையை கொண்டவை; இப்பழங்களைஇனிப்புகளுடன் சேர்த்தோ அல்லதுகேக்குகளுடன் கலந்தோ அல்லதுகுக்கீசமையல்களில்சுவையை கூட்டுவதற்கோ பயன்படுத்தலாம்
- கடோட்டா - கடோட்டா பழங்கள்பச்சைநிறம்மற்றும்ஊதா (பர்ப்பிள்) நிறசதையை கொண்டவை; இவைமற்றஎல்லாஅத்திபழவகைகளைவிடகுறைவானஇனிப்புசுவையை கொண்டவை இப்பழங்களைசமைக்காமல், சிறிதுஉப்புசேர்த்துசாப்பிட்டால்அருமையாகஇருக்கும்.
- காலிமிர்னா - காலிமிர்னாவகைஅத்திபழங்கள்பச்சைகலந்தமஞ்சள்நிற வெளித்தோற்றத்தையும், தேன் போன்ற (அம்பர்) நிறஉட்புறத்தையும் கொண்டது; மற்றஅத்திபழவகைகளைகாட்டிலும்இவைஅளவில்பெரியவைமற்றும்தனித்த, பலமானபருப்புசுவையை கொண்டவை.
- பிரவுன் டர்க்கி - பிரவுன்டர்க்கிவகைஅத்திபழங்கள்ஊதா (பர்ப்பிள்) நிறதோல்மற்றும்சிவப்புநிறசதைபகுதியையும்கொண்டவை; இவைமற்றஅத்திப்பழவகைகளைகாட்டிலும்இலேசானஇனிப்புசுவை கொண்டவை. சாலட்டில்சேர்த்துசாப்பிடஏற்றவை.
- அட்ரியாட்டிக் - அட்ரியாட்டிக்வகைஅத்திபழங்கள்இலேசானபச்சைநிற தோல் மற்றும்பிங்க்நிறஉட்பகுதியையும்; இப்பழங்கள் பொதுவாக அத்திப்பழமிட்டாய்களைஉருவாக்கபயன்படுத்தப்படுகின்றன. இந்தபழங்கள்இலேசானநிறத்தில்காணப்படுவதால், வெள்ளைஅத்திபழங்கள்என்றுஅழைக்கப்படுகின்றன; இவைஅதிகப்படியானஇனிப்புசுவையை கொண்டவை மற்றும்ஒருநல்லஇனிப்புஉணவாகஉண்ணஏற்றவை
அத்திப்பழத்தின்நன்மைகள்
அத்திப்பழம்பழங்காலத்தில்இருந்தேபயன்பாட்டில்இருந்துவரும்ஒருமுக்கியஉணவு பொருள் ஆகும்; இதுஆங்கிலத்தில்ฟิกஎன்றும், இந்தி மொழியில் อันเจเรียஎன்றும்பரவலாகவழங்கப்படுகிறது. இதுஒருபிரபலமான, ஆரோக்கியமான பழவகையாகவும்இருந்துவருகிறது. இந்தபத்தியில்அத்திபழத்தால்ஏற்படக்கூடியநன்மைகள், பயன்கள்என்னென்னஎன்றுபார்த்து, படித்துஅறியலாம்.!
அத்திப்பழம்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்
அத்திபழம்ஏராளமானநன்மைகளைஅளிக்ககூடியதுஎன்றுபலர் சொல்ல கேள்வியுற்று இருப்போம்; ஆனால், நம்பமுடியாதஅளவுஏகப்பட்ட ஆரோக்கியம் சார்ந்தநன்மைகளை, நம்மால்அத்திபழத்தில்இருந்துபெறமுடியும் அவ்வகையில்அத்திப்பழம்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்மற்றும்பயன்கள்என்னென்னஎன்று இப்பொழுது பார்க்கலாம்
நன்மை 1: செரிமானம்
Shutterstock
அத்திபழங்கள்மலச்சிக்கலைதடுத்து, உடலின்செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தஉதவுகின்றன; 2-3 அத்திப்பழங்களைஇரவுமுழுவதும்நீரில்ஊறவைத்து, அவற்றுடன்தேன்கலந்துஅடுத்தநாள்காலையில் உட்கொள்ளலாம். இதுமலச்சிக்கலைமுழுமையாகதடுத்துநிறுத்தஉதவும்.
செரிமானத்தைமேம்படுத்தஉதவும்முக்கியசத்துநார்ச்சத்துஆகும்; அஞ்சீர்எனஅழைக்கப்படும்அத்திபழங்களில்அதிகப்படியானஉணவுமுறைநார்ச்சத்துகள்நிறைந்துள்ளன. இச்சத்துக்கள்மலத்தைசரியானமுறையில்வெளியேற்றி, மலச்சிக்கல்பிரச்சனைஏற்படாமல்பாதுகாக்கஉதவும். இதுமலக்குடலில்சேர்ந்திருக்கும்மலத்தைமிருதுவாகவெளியேற்றி, உடலின்ஓட்டத்தைமேம்படுத்துகிறது; அத்திபழத்தில்இருக்கும்நார்ச்சத்துடையேரியாஎனும் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்குசிகிச்சைஅளிக்கவும், உடலின்செரிமானஅமைப்பைசரியானமுறையில்வைத்துஇருக்கவும்உதவுகிறது
உடலின்செரிமானஅமைப்பின்இயக்கத்தைசரிப்படுத்தஅதிகளவுநார்ச்சத்துநிறைந்தஉணவை உட்கொள்ள வேண்டியதுஅவசியம்மற்றும்அத்திபழங்களைஉண்பதுஅடிக்கடிபசிஏற்படுவதைதடுத்து, வயிறுநிறைந்தது போன்ற உணர்வைஅளிக்கவல்லது (1).
நன்மை 2: இதய ஆரோக்கியம்
இரத்தத்தில்காணப்படும்ட்ரைகிளிசரைட்அளவுகளைகுறைத்து, இதய ஆரோக்கியத்தை முன்னேற்றஅத்திப்பழங்கள்உதவுகின்றன.
இரத்தத்தில்உள்ளட்ரைகிளிசரைட் கொழுப்பு உறுப்புகள்இதய நோய்களை ஏற்படுத்தும்தன்மை கொண்டவை; அத்திபழங்களில்நிறைந்துஇருக்கும்ஆன்டிஆக்சிடென்ட்டுகள்உடலில்காணப்படும் கரோனரி தமனியில்அடைப்பைஏற்படுத்தும்தேவையற்றசெல்களைநீக்கி, இதய நோய் ஏற்படும்வாய்ப்பைகுறைக்கின்றது (2).
அத்திபழங்களில்ஒமேகா -3 மற்றும்ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள்உள்ளன; இவைஇதய நோய் ஏற்படும்ஆபத்தைகுறைக்கும்தன்மை கொண்டவை.
அத்திப்பழத்தில்இருக்கும்ஆன்டிஆக்சிடென்ட்டுகள்இரத்தஅழுத்தத்தைகுறைத்து, கரோனரி தமனியைஅடைக்கும்தன்மை கொண்ட உடலில்காணப்படும்தேவையற்றசெல்களைநீக்கி கரோனரி இதய நோய் ஏற்படாமல்தடுக்கஉதவுகின்றன (3).
மேலும்அத்திபழங்களில்இருக்கும் பொட்டாசியம், ஒமேகா -3 மற்றும்ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள்மாரடைப்பைதடுக்கபெரிதும்உதவுகின்றன (4).
நன்மை 3: உடல்எடைகுறைத்தல்
Shutterstock
அத்திபழத்தில்பலவிதமானசத்துக்கள், வைட்டமின்கள்மற்றும்தாதுக்கள்நிறைந்துஉள்ளன; ஆனால், இப்பழங்களில் கொழுப்பு சத்துமிகக்குறைவாகஉள்ளதுஅல்லது கொழுப்பு சத்துக்கள்இல்லவேஇல்லைஎனலாம். ஒருபெரியஅத்திபழத்தில் 47 கலோரிகள் மட்டுமேஅடங்கியுள்ளன; எனவேஉடல்எடையைகுறைக்கவிரும்பும்நபர்கள், அத்திபழங்களை நொறுக்கு தீனிகளாகஎடுத்து கொள்ளலாம்.
உலர்ந்தஅத்திபழங்களில்அதிகநார்ச்சத்துநிறைந்துகாணப்படுகிறது; அத்திபழத்தில்இருந்துஉடல் 0.2 சதவிகித கொழுப்பை மட்டுமேஎடுத்துக் கொள்ளும் ஆகையால், இதுஉடல்எடைகுறைத்தலுக்குஏற்றஒருஉணவுஆகும்.
நன்மை 4: கொலஸ்ட்ரால்
அத்திபழத்தில்இருக்கும்பெக்டின்ஒருகரையக்கூடியநார்ச்சத்துஆகும்; இதுஉடலின் கொலஸ்ட்ரால் அளவுகளைகுறைக்கஉதவுகிறது (5). அத்திப்பழத்தில்உள்ளஇந்தநார்ச்சத்துஉடலின்அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து, மலக்குடலின்இயக்கத்தைமேம்படுத்தி, செரிமானஅமைப்பைமுறைப்படுத்துகிறது.
அத்திப்பழங்களில், செரோடோனினை உற்பத்திசெய்யும்வைட்டமின்பி 6 நிறைந்துஉள்ளது; செரோடோனின் உங்களதுமனநிலையைமேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைகுறைக்கஉதவுகிறது. உலர்ந்தஅத்திபழங்களில்காணப்படும்ஒமேகா -3 மற்றும்ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள்மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்றவை இயற்கைமுறையில்உடலின் கொழுப்பை மட்டுப்படுத்தி, குறைக்கஉதவுகின்றன
நன்மை 5: இரத்த சோகை
Shutterstock
உடலில்இரும்புச்சத்துகுறைவதால்இரத்த சோகை குறைபாடுஏற்படுகிறது; உலர்அத்திபழத்தில்உள்ளஇரும்புச்சத்து, ஹீமோகுளோபினின் அடிப்படைஉறுப்புஆகும். தேவையானஅளவுஉலர்அத்திபழங்களைஉண்பது, உடலில்இரும்புச்சத்தின்அளவைஅதிகரித்து ஹீமோகுளோபின் அளவுஅதிகரிக்கஉதவும் (6).
வளரும்குழந்தைகள், பருவவயதினர், மாதவிடாய்பருவத்தில்இருக்கும் & கர்ப்பமாகஇருக்கும்நபர்களில்இரும்புச்சத்துகுறைபாடுஏற்படலாம்; அவர்கள்முறையானமருத்துவ ஆலோசனையுடன் அத்திபழங்களைஉணவுமுறையில்சேர்த்துக் கொள்வது உடலில்இரும்புச்சத்துமற்றும் ஹீமோகுளோபின் அளவுகளைஅதிகரிக்கஉதவும், மேலும்இரத்த சோகை குறைபாட்டைமுற்றிலுமாக போக்க உதவும் (7).
நன்மை 6: நீரிழிவு நோய் / சர்க்கரை நோய்
அத்திபழம்மட்டுமில்லாமல், அத்திமரஇலைகளும்உடலுக்குஏராளமானநன்மைகளைஅளிக்கக்கூடியவை; உடலின்சர்க்கரைஅளவைகட்டுக்குள்வைக்கஅத்திமரஇலைகள்பெரிதும்பயன்படுகின்றன ஆய்வுபடிப்பினையின்படி, உணவுமுறையில்அத்திமரஇலைகளைசேர்த்துக் கொள்வது இரத்தசர்க்கரைஅளவைகட்டுப்பாட்டில்வைத்து, இன்சுலினைஅதிகரித்துநீரிழிவு நோயை போக்க
அத்திமரஇலைகளில்இருந்துதேநீர்தாயரித்தும் உட்கொள்ளலாம்; 4-5 இலைகளைஎடுத்து, நீரில்இட்டு கொதிக்க வைத்து, பின்அதைவடிகட்டி - வடிகட்டியநீரை, தேநீர் போன்று பருகலாம் உலர்ந்தஅத்திமரஇலைகளைஎடுத்து, பொடி செய்தும்கூடபயன்படுத்தலாம்; அத்திமர இலைப்பொடியை இரண்டுதேக்கரண்டிஎடுத்து, நீரில்இட்டு கொதிக்க வைத்துதேநீர்தயாரித்துபருகலாம். இச்செய்முறையைமுறையானமருத்துவ ஆலோசனைக்கு பின் மேற்கொள்ளவும்.
நன்மை 7: புற்றுநோய்
அத்திபழங்களில்அதிகளவுநார்ச்சத்துக்கள்நிறைந்துஉள்ளனமற்றும்பருவவயதில்இருக்கும்பெண்கள்இந்தநார்ச்சத்துக்கள்நிறைந்தபழங்களை உட்கொள்வது, அவர்களில்மார்பக புற்றுநோய் ஏற்படும்பாதிப்பைகுறைக்கஉதவும் (8).
நார்ச்சத்துக்களை 16% -ற்கும்அதிகமாகஎடுத்துக் கொள்வது மார்பக புற்றுநோய் ஏற்படும்பாதிப்பைகுறைக்கஉதவும்மற்றும் மெனோபாஸ் நிகழ்வதற்குமுன்பாகமார்பக புற்றுநோய் ஏற்படும்வாய்ப்பை 24% குறைக்கஉதவும் (9) அத்திபழத்தில்இருந்துதயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும்உலர்அத்திபழங்கள் போன்றவை மெனோபாஸிற்கு பிறகுபெண்களில், மார்பக புற்றுநோய் ஏற்படாமல்தடுக்கஉதவுகின்றன
அத்திப்பழங்களைதினசரியாக, தொடர்ந்து உட்கொண்டு வருவதுபெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல்பாதுகாக்கஉதவும் (10). அத்திபழத்தில்இருக்கும்நார்ச்சத்து, உடலில்உள்ளஅசுத்தத்தைவிரைந்து போக்க உதவுகிறது; மேலும்இதுபெருங்குடல் புற்றுநோய் பாதிப்பைதடுத்துநிறுத்தஉதவுகிறது. அத்திபழத்தில்உள்ளஎண்ணற்றவிதைகள், அதிகளவுமியூஸினை கொண்டுள்ளன; இவைபெருங்குடலில்உள்ளசளிமற்றும்அசுத்தங்களைசேகரித்து, அவற்றைவெளியேற்றஉதவுகின்றன.
நன்மை 8: எலும்புகளைபலப்படுத்தும்
அத்திபழத்தில்காணப்படும்கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள்எலும்புகளைபலப்படுத்தஉதவுகின்றன. வயதானகாலத்தில்ஏற்படும்எலும்புஉடைதலைதடுத்து, எலும்பின்அடர்த்தியைஅதிகரிக்கஅத்திபழங்கள்உதவுகின்றன; எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியத்தேவையானகால்சியம்அத்திபழத்தில்நிறைந்துஉள்ளது.
அத்திபழங்களில்உள்ள பொட்டாசியம், உப்புகுறைந்தஉணவுமுறையால்ஏற்படும்யூரின்கால்சியஇழப்பைதடுக்கஉதவுகிறது (11). இதுஎலும்புகள்மெலிதாவதைதடுக்கஉதவுகிறது.
நன்மை 9: ஆஸ்துமா
மூச்சுக்குழாய்ஆஸ்துமாவைசரிசெய்ய, வெந்தயவிதைகள், தேன், அத்திபழம்கலந்தகலவையை உட்கொள்ள வேண்டும்; அத்திபழத்தைசாறாகவும் உட்கொள்ளலாம், இதுஆஸ்துமாவில்இருந்துநிவாரணம்அளிக்கஉதவும்.
அத்திபழங்கள், உடலில்காணப்படும்சளிச்சவ்வினைஈரப்படுத்தி, கபத்தைகாயவைக்கஉதவுகின்றன; இதனால்ஆஸ்துமாவின்அறிகுறிகளில்இருந்துநிவாரணம்பெறலாம். மேலும்இப்பழங்களில்உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் உடலில்ஆஸ்துமாஉருவாககாரணமாகஇருக்கும்தேவையற்றசெல்களைபயன்படுகின்றன
நன்மை 10: இரத்தஅழுத்தம்
Shutterstock
அத்திபழத்தைதினசரிஉணவுமுறையில்சேர்த்துக் கொள்வது, இரத்தஅழுத்தத்தைகுறைக்கஉதவும்எனபலஆராய்ச்சிகட்டுரைகள்கருத்துதெரிவிக்கின்றன அத்திபழங்களில்நிறைந்துஇருக்கும்நார்ச்சத்துஉயர்இரத்தஅழுத்தஅபாயத்தைகுறைத்து, அத்திபழத்தில்இருக்கும் பொட்டாசியம் குறைந்தஇரத்தஅழுத்தஅளவைஅப்படியேபராமரிக்கஉதவுகிறது (12).
பொட்டாசியத்தை தவிர, ஒமேகா -3 மற்றும்ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களும்இரத்தஅழுத்தத்தைபராமரிக்கஉதவுகின்றன (13), (14).
วันที่ 11: ஆன்டிஆக்சிடென்ட்
ஆன்டிஆக்சிடென்ட்டுகளின்சக்திவீடாக, அத்திபழங்கள்திகழ்கின்றன; உடலில் நோயை உண்டுசெய்யும்தேவையற்றசெல்களை போக்க அத்திபழங்கள்பெரிதும்உதவுகின்றன பழுத்தஅத்திபழங்கள்அதிகஅளவுஆன்டிஆக்சிடென்ட்டுகளை கொண்டு உள்ளன.
அத்திபழங்களில்அதிகஅளவு ஃபினோலிக் ஆன்டிஆக்சிடெண்ட்டுகள்நிறைந்துஉள்ளன; இந்தஆன்டிஆக்சிடென்ட்டுகள்பிளாஸ்மாவின் லிப்போ புரதங்களைமேம்படுத்தி, மேலும்ஆக்சிடேஷன்நிகழாமல்பாதுகாக்கஉதவுகின்றன (15).
நன்மை 12: பாலியல்திண்மை
அத்திபழங்கள்ஒருசிறந்தஇனப்பெருக்கமற்றும்பாலியல்சப்ளிமெண்ட்டாககருதப்படுகின்றன; இவைஅதிகஅளவுகால்சியம், இரும்பு, பொட்டாசியம், ஜிங்க் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. அத்திபழங்களில்அதிகப்படியானமக்னீசியம்மற்றும்தாது பொருட்களும் நிறைந்துஉள்ளன; இவைஉடலில்பாலியல் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியைஅதிகரிக்கஉதவுகின்றன.
பாலியல்செயல்பிறழ்ச்சிகளான, மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை, பாலியல்பசி போன்ற பிரச்சனைகளை போக்க அத்திபழங்கள்உதவுவதாககூறப்படுகிறது; ஆனால், இதைநிரூபிக்கும்எந்தஒருஅறிவியல்ஆதாரமும்கிடைக்கப்பெறவில்லை. பலகலாச்சாரமுறைகளில்குழந்தையின்மைகுறைபாட்டை போக்க அத்திபழங்கள்பயன்படுத்தப்பட்டுஉள்ளன; இப்பழங்களில்உள்ள அமினோ அமிலம்நைட்ரிக்அமிலஉற்பத்தியைஅதிகரித்து, உடலின்எல்லாஉடல்உறுப்புகளுக்கும், பாலினஉறுப்புகளுக்கும்சரியானஇரத்தஓட்டம்கிடைக்கஉதவுகிறது பாலில்அத்திபழங்களைஊறவைத்து, அதைஅடுத்தநாள்காலையில்உண்டால், அதுபாலியல்செயல்பாடுகளைமேம்படுத்தஉதவும்.
วันที่ 13: தொண்டை புண்
அத்திபழங்களில்இருக்கும்அதிகப்படியானமியூஸிலேஜ், தொண்டை புண்ணைகுணப்படுத்தி, தொண்டையை பாதுகாக்கஉதவுகிறது. இப்பழங்கள் தொண்டையை மிருதுவாக்கி, அவற்றின்இயற்கைசாறுகள்மூலம் தொண்டை வலிமற்றும்குரல்வளையில்ஏற்பட்டுள்ளஅழுத்தத்தைஉதவுகின்றன
டான்ஸில்களைஇயற்கையானமுறையில்குணப்படுத்தஅத்திபழங்கள்பயன்படுகின்றன; டான்சில்குறைபாட்டால்ஏற்பட்டவீக்கம்மற்றும்எரிச்சலைகுறைக்கஇப்பழங்கள்உதவுகின்றன. வெந்நீர்மற்றும்அத்திப்பழம் கொண்டு ஒருபேஸ்ட்தயாரித்து, அதை தொண்டையில் தடவவும்; இது தொண்டை வலியைகுறைத்து, தொண்டையை மிருதுவாக்கஉதவும்
நன்மை 14: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
உடலில் நோய்க்குறைபாடுகளை உருவாக்கும்பாக்டீரியா, வைரஸ், வட்டபுழுக்களை கொல்ல அத்திபழங்கள்உதவுகின்றன; இவற்றில்இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, ஆன்டிஆக்சிடென்ட்ஊட்டச்சத்துக்கள்உடலின் நோய் எதிர்ப்புசக்தியைஉதவுகின்றன
நன்மை 15: ஆற்றலின்ஆதாரம்
அத்திபழங்களைஉணவுமுறையில்சேர்த்து கொள்வது, உடலின்ஆற்றல்அளவைஅதிகரிக்கஉதவும்; அத்திபழங்களில்உள்ள கார்போஹைட்ரேட் மற்றும்சர்க்கரை, உடலின்ஆற்றல்சதவிகிதத்தைஅதிகரிக்கஉதவுகின்றன (16).
நன்மை 16: மலச்சிக்கல்
Shutterstock
அத்தி பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழ வகை ஆகும்; இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது, உடலின் செரிமான இயக்கம் மற்றும் மலக்குடலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மலக்குடலில் ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிகவும் அவசியம்.
இவ்விரண்டு சத்துக்களும் அத்தி பழங்களில் நிறைந்து காணப்படுகின்றன; ஆகவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அத்தி பழங்களை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அத்திப்பழம் தரும் சரும நன்மைகள்
அத்தி பழம் என்றாலே ஆரோக்கியம் தரும் பழம் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்குள் எழுகிறதா? இந்த பதிப்பின் இப்பகுதியை படித்து முடித்த பின் நிச்சயம் உங்கள் எண்ணத்தில் மாற்றம் நிகழும். இந்த பத்தியை படித்த பின் அத்திப்பழம் என்றால் அழகு என்ற விஷயமும் உங்கள் மனதில் இடம் பெறும்.
ஆம்! அத்திப்பழம் ஆரோக்கிய நன்மைகள் மட்டும் இல்லாமல், பல விதமான சரும, அழகு நன்மைகளையும் அளிக்கக்கூடியதாய் திகழ்கிறது. அத்தி பழம் அளிக்கும் சரும நன்மைகள் என்ன என்பதை நீங்களே படித்து பாருங்கள்!
நன்மை 1: சுருக்கங்கள்
ஒரு ஆய்வு படிப்பினையில், அத்தி பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி கொலாஜென்ஸ் பண்புகள், சருமத்தின் சுருக்கங்களை குறைத்து, அவற்றை ஆழமாக போக்க உதவுகின்றன (17).
பிறிதொரு ஆய்வு படிப்பினையில், அத்தி பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள், சருமத்தில் மெலனின் அளவை குறைத்து, நீரிழப்பை தடுத்து, சருமத்தின் சீபத்தை பாதுகாக்க உதவுகிறது; மேலும் இது சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரித்து உள்ளது. எனவே, உடலின் நிறம், முகப்பரு, சுருக்கங்கள், விரிசல்கள் போன்ற எல்லா சரும பிரச்சனைகளையும் போக்க அத்திப்பழம் உதவுகிறது (18).
நன்மை 2: கொப்புளங்கள் & மருக்கள் (பாலுண்ணி)
Shutterstock
சருமத்தில் மருக்கள், பாலுண்ணிகள், கொப்புளங்கள் உள்ள இடங்களில், நேரடியாக அத்திப்பழங்களை தடவலாம்; இதில் உள்ள லேடெக்ஸ் மருக்களுக்கு எதிரான செயல்பாட்டை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இது லேடெக்ஸ் என்சைமின் புரோடியோலிடிக் செயல்பாடு காரணமாக நிகழலாம் (19).
நன்மை 3: சருமத்தை புத்துணர்வாக்கும்/ சருமத்தை மென்மையாக்கி, மிருதுவாக்கும்
சரும அழகை அதிகரிக்க அத்திப்பழங்கள் ஒரு சிறந்த தீர்வாகும்; அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் அல்லது அத்திப்பழ மாஸ்க்கை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சரும அழகை அதிகரிக்கலாம். இப்பொழுது அத்திப்பழ மாஸ்க் செய்வது எப்படி என பார்க்கலாம்:
ஒரு பெரிய அத்திப்பழம் அல்லது இரண்டு சிறிய அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளவும்; அத்திப்பழங்களை நறுக்கி, அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். சருமத்தின் தன்மையை மேம்படுத்த விரும்பினால், அத்திப்பழத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது யோகர்ட்டை கலந்து கொள்ளவும்; இந்த கலவையை சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நீர் கொண்டு கழுவி விடவும். இதை செய்து முடித்த பின் புத்துணர்வான சருமத்தை பெறலாம்.
அத்தி பழத்தில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்; அது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, வெள்ளையான சருமம் ஏற்பட உதவும். ஐந்து அத்தி பழங்களை சேர்த்து கூழாக்கி, மிருதுவான பேஸ்ட் ஒன்றை தயாரித்து கொள்ளவும். இப்பேஸ்ட்டில் தலா ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் உணவு, பால் மற்றும் அரை தேக்கரண்டி உலர்ந்த இஞ்சி பொடி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலக்கி கொள்ளவும். இதை முகம் மற்றும் சருமத்திற்கு வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால், மென்மையான, மிருதுவான சருமத்தை பெறலாம்.
அத்திப்பழம் அளிக்கும் தலைமுடி நன்மைகள்
அத்தி பழம் உண்டால், உடலில் நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என அறிந்து இருப்போம்; ஆனால், நமக்கு அழகு மற்றும் ஒரு சரியான அடையாளத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் தலைமுடிக்கும் அத்தி பழம் பல நன்மைகளை வழங்குகிறது.
அத்தி பழத்தினால் தலைமுடிக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் மாறுதல்கள் யாவை என இங்கு காண்போம்.
நன்மை 1: முடி வளர்ச்சி
Shutterstock
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி இழப்பு ஆகும்; அத்தி பழத்தில் மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான அளவு நிறைந்து உள்ளன. இவ்வூட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன; மேலும் இவை உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உச்சந்தலையில் முடியின் வளர்ச்சியை முடுக்கி விட உதவுகின்றன.
நன்மை 2: தலைமுடியை நிலைப்படுத்தும்
அத்தி பழம் என்பது முடி பராமரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும்; இப்பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகள், பொருட்கள் தலைமுடியின் நிலைப்பாட்டை மேம்படுத்த உதவும் ஹேர் கண்டிஷனர்களை தயாரிக்க உதவுகின்றன. பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்கவும், முடி பாதிப்பை போக்கவும் உதவுகின்றன. இவை தலையில் பார உணர்வை ஏற்படுத்தாமல், முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன.
அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு
அத்தி பழத்தில் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன; அத்தி பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்தி மையமாக விளங்குகின்றன. இப்பழங்கள் அதிகளவு பைட்டோ ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள் போன்றவற்றை கொண்டுள்ளன. உலர்ந்த அத்தி பழங்களில் அதிகளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
அத்தி பழங்களில் அதிக அளவு இயற்கை சர்க்கரை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன; அத்தி பழத்தில் நிறைந்து காணப்படும் ஊட்டச்த்துக்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
கொள்கை | ஊட்டச்சத்து மதிப்பு | RDA –இன் சதவீதம் |
---|---|---|
ஆற்றல் | 74 kcal | 4% |
கார்போஹைட்ரேட் | 19.18 g | 15% |
புரதம் | 0.75 g | 1.5% |
மொத்த கொழுப்பு | 0.30 g | 1% |
கொலஸ்ட்ரால் | 0 mg | 0% |
நார்ச்சத்து | 2.9 g | 7% |
வைட்டமின்கள் | ||
ஃபோலேட் | 6 ug | 1.5% |
நியாசின் | 0.400 mg | 2.5% |
பேன்டோதெனிக் அமிலம் | 0.300 mg | 6% |
பைரிடாக்சின் | 0.113 mg | 9% |
ரிபோஃபிளோவின் | 0.050 mg | 4% |
தையமின் | 0.060 | 5% |
வைட்டமின் ஏ | 142 IU | 5% |
வைட்டமின் சி | 2 mg | 3% |
வைட்டமின் இ | 0.11 mg | 1% |
வைட்டமின் கே | 4.7 ug | 4% |
எலக்ட்ரோலைட்டுகள் | ||
சோடியம் | 1 mg | 0% |
பொட்டாசியம் | 232 mg | 5% |
தாது பொருட்கள் | ||
கால்சியம் | 35 mg | 3.5% |
காப்பர்/ தாமிரம் | 0.070 mg | 8% |
இரும்பு | 0.37 mg | 5% |
மக்னீசியம் | 17 mg | 4% |
மாங்கனீசு | 0.128 mg | 5.5% |
செலினியம் | 0.2 ug | <1% |
ஜிங்க்/ துத்தநாகம் | 0.15 mg | 1% |
பைட்டோ ஊட்டச்சத்துக்கள் | ||
கரோட்டீனின் – B | 85 ug | – |
லூடெய்ன் – ஜியாசாந்தின் | 9 ug | – |
அத்திப்பழத்தை பயன்படுத்துவது எப்படி?
Shutterstock
அத்தி பழங்கள் ஜூஸி மற்றும் இனிப்பு சுவை கொண்டவை; இவற்றின் சதைகள் மற்றும் மொறுமொறுப்பான விதைகளை மென்று சாப்பிடலாம், இவற்றின் சுவை அட்டகாசமாக இருக்கும். இப்பழங்களை பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ உட்கொள்ளலாம்; புதிதான அத்தி பழங்களில், வறண்ட பழங்களை காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இப்பழங்களை அதிகம் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்; செயற்கை இனிப்பூட்டிகளை சேர்க்காமலேயே இப்பழங்கள் மிகவும் சுவை வாய்ந்ததாக இருக்கும்.
அத்தி பழங்களை சாப்பிடும் முன், அவற்றை நன்றாக கழுவி, தண்டுப்பகுதியை மெதுவாக நீக்கி விடவும்; புதிதான அத்தி பழங்களை அப்படியே அல்லது தோலுரித்து கூட உண்ணலாம். உறைய வைக்கப்பட்ட அத்திப்பழங்களை நீரில் இடுவதன் மூலம், அவற்றை சாறு நிறைந்த பழங்களாக பெற இயலும்.
உலர்ந்த அத்தி பழங்களை நொறுக்குத்தீனி போல் உட்கொள்ளலாம்; இவற்றை அறுத்து, உடன் உலர்ந்த கிரான் பெர்ரிகள், சிக்கன் சாலட் அல்லது காய்கறி சாலட் ஆகியவற்றை சேர்த்து சாண்ட்விச் போன்ற உணவுகளை தயாரித்து உட்கொள்ளலாம்.
புதிதான, துண்டாக்கப்பட்ட அத்திப்பழங்களில், வெண்ணெயை தடவி நொறுக்குதீனியாக உண்ணலாம்; தூய அத்தி பழங்களை பால்சமிக் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சேர்த்து, ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ‘ஹோம் மேட்’ சாலட் தயாரித்து உண்ணலாம். புதிதான அத்தி பழங்களை சாலட், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அத்தி பழங்கள் அதிகளவு அல்கலைன் சத்துக்களை கொண்டுள்ளதால், இவற்றை வேறு உணவு வகைகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்; இவை உணவின் சுவையை மாற்றாது. உலர்ந்த அத்தி பழங்கள், புதிதானவற்றை காட்டிலும் அதிக இனிப்பு அளவினை கொண்டவை; இவற்றை துண்டுகளாக அறுத்து, உணவுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.
பதப்படுத்தப்பட்ட அத்தி பழங்களை கொண்டு, பை (pie) வகை உணவுகள், புட்டிங்குகள், கேக்குகள், ஜாம்கள், இதர பேக்கரி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; மேலும் உலர்ந்த அத்தி பழங்களை முசெலி மிட்டாய்கள், கஞ்சி, தானியக்கலவை கஞ்சி போன்றவை தயாரிக்க பயன்படுத்தலாம். மேலும் உலர்ந்த அத்தி பழங்களை சூப்கள், ஸ்டியூக்கள் மற்றும் இறைச்சி வகைகளை தயாரிக்க மற்றும் அவற்றின் சுவையை கூட்ட பயன்படுத்தலாம்; சில இடங்களில் சர்க்கரைக்கு பதிலாக அத்திப்பழ பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.
சில முக்கிய குறிப்புகள்:
- நல்ல பலன்களை பெற புதிய அத்தி பழங்களை பயன்படுத்த வேண்டும்.
- பழங்களை எப்பொழுதும் சுத்தமாக, மெதுவாக கழுவி பயன்படுத்தவும்.
- அத்திப்பழங்களை நறுக்கும் அல்லது வெட்டும் முன், கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து பயன்படுத்த வேண்டும்.
- சுண்ணாம்பு கலந்த அத்தி பழங்கள் உண்பதை தவிர்க்கவும்.
- உலர்ந்த அத்தி பழங்கள் மிகவும் கடினமடைந்து விட்டால், அவற்றை நீரில் ஊற வைத்து உபயோகிக்கலாம்.
- குளிர்சாதன பெட்டியின், குளிரான பகுதியில் ஒரு பையில் அத்தி பழங்களை போட்டு வைத்து, பழங்களை சேமிக்கலாம்.
அத்திப்பழத்தை சேமித்து வைப்பது எப்படி?
அத்திப்பழத்தை கடைகளில் இருந்து வாங்கி வந்த பின், அவற்றை சேமித்து வைப்பது எப்படி என்று பார்க்கலாம்:
- புதிதான அத்தி பழங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியாது; ஆகையால், அவற்றை வாங்கியவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்க வேண்டும். அத்தி பழங்களை ஒரு பிளாஸ்டிக் அல்லது ஜிப் பையில் போட்டு, அவற்றை அறுத்து விடாமல், அவற்றிற்கு சேதம் ஏற்படாத வகையில் சேமிக்க வேண்டும்.
- இலேசாக பழுத்த அத்தி பழங்களை அறை வெப்பநிலையில், சூரிய ஒளி அவை மீது நேரடியாக படாத வகையில் வைக்க வேண்டும்; மீறி சூரிய ஒளி பட்டுவிட்டால் பழங்கள் விரைவில் பழுத்துவிடும்.
- புதிதான அத்தி பழங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியாத காரணத்தால், அவற்றை 2 முதல் 3 நாட்களுக்குள் உண்டு விடுவது நல்லது.
- குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் அத்தி பழங்களை அவ்வப்போது வெளியே எடுத்து, ஒரு தண்ணீர் நிறைந்த பௌலில் இட்டு எடுக்கவும்; இது பழத்தின் சுவையையும், தன்மையையும் காக்க உதவும்.
- உலர்ந்த அத்தி பழங்களை மாதக்கணக்கில் குளிர்சாதன பெட்டி அல்லது வறண்ட இடத்தில் சேமித்து வைக்கலாம்.
- அத்தி பழங்களை முழுமையாகவோ, நறுக்கியோ அல்லது தோலுரித்தோ 3 மாத காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.
- இப்பழங்கள் டப்பாக்களில் அடைக்கப்பட்டு 6 மாத காலத்திற்கு கெட்டுப்போகாத வகையில் கூட சேமிக்கப்படுகின்றன; ஆனால், அத்தி பழங்கள் நிறைந்த டப்பாவை திறந்து விட்டால், திறந்த தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் பழங்களை உண்டு முடித்து விட வேண்டியது மிகவும் அவசியம்.
அத்திப்பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்
அத்திப்பழம் ஃப்ரெக்டோஸ் சத்துக்களை கொண்டுள்ளது; ஆகையால், இதனை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் அத்தி பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன; எனவே இவை உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவாது. ஆகவே அத்தி பழங்களை உணவு முறையில் போதுமான, தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.
பொதுவாக அத்தி பழம் பல வித ஆரோக்கிய, அழகு மற்றும் கூந்தல் நன்மைகளை வழங்குகிறது என்று பார்த்து அறிந்தோம். இந்த நன்மைகள் மட்டும் இல்லாமல், அத்திப்பழம் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குதல், உடலின் சருமத்தில் ஏற்படும் வெண்குஷ்டம், வெண்புள்ளிகள், தோலின் நிற மாற்றம் போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. இந்த தோல் சார்ந்த நன்மையில் முக்கிய இடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட அத்தி பழம் ஆகும்; இதனை சீமை அத்திப்பழம் என்றும் வழங்குவர். இந்த சீமை அத்தி பழத்தை தொடர்ந்து 40 நாட்களுக்கு உண்டு வந்தால் உடலின் பலம் அதிகம் ஆகும் என்று கூறுகின்றனர்.
நம் அனைவரின் உடலமைப்பும் வேறுபட்ட ஒன்று; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித உணவு முறை பிடிக்கும். மேலும் உட்கொள்ளும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒவ்வொரு வகையில் இருக்கும்; எனவே, அத்தி பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ளும் முன்னர், உங்களது மருத்துவரிடம் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். இந்த அத்தி பழத்தால் உடலில் ஒவ்வாமை போன்ற குறைபாடுகள் ஏற்படுமா என்று சோதித்து அறிந்த பின், இவற்றை உண்ண தொடங்குங்கள்; அதுவே நலம் பயக்கும்.
அத்திப்பழத்தை நீங்கள் முன்னரே உண்டதுண்டா? அதன் சுவை உங்களுக்கு பிடிக்குமா? அத்தி பழத்தால் உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!