สารบัญ:
- ஆப்ரிகாட்பழம்வழங்கும்நன்மைகள் - ประโยชน์ของแอปริคอทในภาษาทมิฬ
- ஆப்ரிகாட்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของแอปริคอทในภาษาทมิฬ
- நன்மை 1: செரிமானம்
- நன்மை 2: கண்பார்வையைமேம்படுத்தும்
- நன்மை 3: உடல்எடையைகுறைத்தல்
- நன்மை 4: இதய ஆரோக்கியம்
- நன்மை 5: இரத்தசோகை
- நன்மை 6: சர்க்கரை நோய்
- நன்மை 7: புற்றுநோய்
- நன்மை 8: காது வலி
- நன்மை 9: அழற்சியை எதிர்த்து போராடும்
- நன்மை 10: இரத்த அழுத்தம்
- நன்மை 11: கல்லீரல் சேதம்
- நன்மை 12: கர்ப்ப காலம்
- நன்மை 13: திரவ சமநிலை
- நன்மை 14: சுவாச நோய்கள்
- சீமை வாதுமை பழத்தின் சரும நன்மைகள் – Skin Benefits of Apricot in Tamil
- நன்மை 1: வயது முதிர்ச்சியை தடுக்கும்
- நன்மை 2: மிளிரும் சருமம்
- நன்மை 3: சரும கோளாறுகள்
- சர்க்கரை பாதாமி பழம் அளிக்கும் கூந்தல் நன்மைகள் – Hair Benefits of Apricot in Tamil
- நன்மை 1: தலைமுடியின் வளர்ச்சி
- நன்மை 2: உச்சந்தலை பிரச்சனைகள்
- ஆப்ரிகாட் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Apricot Nutritional Value in Tamil
- சீமை வாதுமை பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Apricot in Tamil
- ஆப்ரிகாட் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Apricot in Tamil
ஆங்கிலத்தில்ஆப்ரிகாட்என்றுஅழைக்கப்படும்மஞ்சள்கலந்தஆரஞ்சுநிறசதை கொண்ட வாதுமைபழம், சீனநாட்டில்தான்முதன்முறையாகபயிரிடப்பட்டது; இப்பழம் தோன்றியது சீனநாட்டில்தான். பின்னர்அங்கிருந்துமெரிடிரினியன், அமெரிக்கா போன்ற பகுதிகளுக்குபரவியது. நம்நாட்டில்இதனைசீமைவாதுமைஎன்றுஅழைப்பர்; வாதுமைபழம்இனிப்புமற்றும்புளிப்புசுவையை கொண்டது. வெறும் 100 கிராம்ஆப்ரிகாட்பழத்தில் 12% வைட்டமின்கள்ஏமற்றும்சி, 6% பொட்டாசியம் போன்ற சத்துக்கள்நிறைந்துள்ளன இச்சத்துக்கள்அனைத்தும்தினமும்நம்உடலுக்குதேவைப்படும்முக்கியசத்துக்கள்ஆகும்; இவற்றைபெறதினமும்பாதாமிபழங்களை உட்கொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, ஆப்ரிகாட்பழத்தில்இன்னும்ஏகப்பட்டநன்மைகள்நிறைந்துள்ளன; ஆப்ரிகாட்பழம்வழங்கும்நன்மைகள், பயன்கள்என்னென்னஎன்பதைபற்றிஇப்பதிப்பில்பார்க்கலாம்.
ஆப்ரிகாட்பழம்வழங்கும்நன்மைகள் - ประโยชน์ของแอปริคอทในภาษาทมิฬ
வாதுமைபழம்மனிதர்களுக்குபல்வேறு ஆரோக்கிய, சருமநன்மைகளைவழங்கக்கூடியது; ஆப்ரிகாட்அளிக்கும்நன்மைகள்என்னென்னஎன்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஆப்ரிகாட்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของแอปริคอทในภาษาทมิฬ
ஆப்ரிகாட்டின்நன்மைபட்டியலில்முதலில்அப்பழம்வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்பற்றிபார்க்கலாம்.
நன்மை 1: செரிமானம்
ஆப்ரிகாட்பழத்தில்இருக்கும்கரையக்கூடியநார்ச்சத்து, ஆரோக்கியமான குடல்இயக்கத்தைமேம்படுத்தி, பலநாட்களாககுடலில்சேர்ந்துஇருக்கும்மலத்தைவெளியேற்றஉதவும் நார்ச்சத்துஎன்பது கொழுப்பு அமிலங்களாகஉடைக்கப்பட்டு, செரிமானத்தைமேம்படுத்தஉதவும்; வாதுமைபழத்தில்இருக்கும்நார்ச்சத்துமலச்சிக்கல்மற்றும்வயிறுஊதுதல்ஆகியபிரச்சனைகளைகுணப்படுத்தஉதவுகிறது
நன்மை 2: கண்பார்வையைமேம்படுத்தும்
தினசரிபழங்களை உட்கொள்வது கண்பார்வைகுறைபாட்டினைகுறைக்கஉதவும். வாதுமைபழத்தில்உள்ள கரோட்டினாய்டுகள், சாந்தோஃபில்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள், வயதாவதால்ஏற்படும்கண்பார்வைகுறைபாட்டைதடுக்கஉதவும் பாதாமிபழத்தில்கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையானவைட்டமின்ஏநிறைந்துள்ளது; இதனை ரெட்டினோல் என்றும்அழைப்பர், இதுவயதுசார்ந்தமாகுலர்குறைபாட்டைதடுக்கஉதவும். ஆய்வுகளின்கருத்துப்படி, ஆப்ரிகாட்பழத்திலிருந்துஎடுக்கப்படும்கெர்னல் பொருட்கள் கண்கள்வறண்டு போவதை தடுத்து, கண்ணீர்உற்பத்தியைபெருக்கஉதவுகின்றன (1).
நன்மை 3: உடல்எடையைகுறைத்தல்
ஆப்ரிகாட்பழத்தில்இருக்கும்நார்ச்சத்துஅதிகநேரத்திற்குபசிஏற்படாமல்பார்த்துக் கொள்வதால், இப்பழம்உடல்எடையைகுறைப்பதிலும்முக்கியபங்குவகிக்கிறது. நமக்குஏற்படும்பசிஉணர்வைகட்டுப்படுத்திவயிறுநிறைந்தது போன்ற உணர்வைஏற்படுத்தும்வண்ணம்டான்சைட்ஸ்எனும்மூளையின்செல்களைதூண்ட, சீமைவாதுமையில்உள்ளஊட்டச்சத்துக்கள் உடல்வளர்சிதைமாற்றத்தைதுரிதப்படுத்தி, உடல்எடையைகுறைக்கபழங்கள்உதவுகின்றன.
நன்மை 4: இதய ஆரோக்கியம்
சீமைவாதுமையில்இருக்கும் பொட்டாசியம் இரத்தஅழுத்தஅளவுகளைகுறைத்து, மாரடைப்புஏற்படாமல்தடுக்கஉதவும்; ஆப்ரிகாட்பழத்தில்இருக்கும்நார்ச்சத்துஉடலின் கொலஸ்ட்ரால் அளவுகளைகுறைத்து, ஏதிரோஸ்கிளிரோசிஸ் போன்ற இதய நோய்களை தடுக்கஉதவுகிறது
நன்மை 5: இரத்தசோகை
ஆப்ரிகாட்பழங்களில்மிகச்சிறந்தஇரும்புச்சத்துநிறைந்துள்ளது; அது இரத்தசோகை ஏற்படாமல்தடுக்கஉதவும். உடலில் ஹீமோகுளோபினை உற்பத்திசெய்து, இரத்தத்தின்தரத்தைமேம்படுத்தஇரும்புச்சத்துஉதவுகிறது.
நன்மை 6: சர்க்கரை நோய்
சர்க்கரைபாதாமிஎனப்படும்ஆப்ரிகாட்பழங்கள், மிகவும்குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் (ஒருபழத்தில் 17 கலோரிகள் மற்றும் 4 கிராம்கள் கார்போஹைட்ரேட்டுகள்) கொண்டவை மற்றும்இப்பழங்கள்சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்பயன்தருபவைஆகும் நீரிழிவு நோயாளிகள் அவர்களதுஉணவுமுறையில்சர்க்கரைபாதாமிபழங்களைசேர்த்துக் கொள்வது நல்லது; இப்பழங்களில்இருக்கும்நார்ச்சத்துஇரத்தசர்க்கரைஅளவுகளைசரிப்படுத்தஉதவுகின்றன.
ஆப்ரிகாட்பழங்களில்குறைவானகிளைகெமிக்குறியீடுஇருப்பதால், இவைஉடலின்இரத்தசர்க்கரைஅளவுகளைகுறைக்ககண்டிப்பாகஉதவும்மற்றும்சர்க்கரைஅளவுகள்உச்சத்தைஅடையாமல்பார்த்துக் கொள்ள இப்பழத்தில்உள்ளவைட்டமின்ஈசத்துஒருநல்லஆன்டிஆக்சிடென்ட்டாகசெயல்பட்டுஇரத்தசர்க்கரைஅளவுகளைஉதவும்
ஸ்பானிஷ்ஆய்வுப்படி, கடலைகள்மற்றும்உலர்பழங்கள்முதலியவற்றைஉணவில்சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுகுறிக்கும் சர்க்கரைபாதாமிஎன்பதுகூடஒருஉலர்பழமாகஇருப்பதால், இதுமனிதஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது (2).
நன்மை 7: புற்றுநோய்
சீமை வாதுமை பழத்தின் கொட்டைகளில் சில ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன மற்றும் ஆப்ரிகாட் ஆரோக்கிய நன்மைகளுள் புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் நன்மையும் அடங்கும் என்று சிலர் கூறுகின்றனர்; ஆப்ரிகாட் பழ கொட்டையில் காணப்படும் அமிகிடாலின் (amygdalin) எனும் உறுப்பு புற்றுநோய் கட்டிகளை அழித்து, புற்றுநோய் செல்கள் பல்கி பெருகுவதை நிறுத்தி, புற்றுநோயை தடுக்க உதவும் என்று சில அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்மை 8: காது வலி
இது குறித்து மிகச்சில ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன; இரண்டு முதல் மூன்று துளிகள் ஆப்ரிகாட் எண்ணெயை காதில் வலி உள்ள பகுதிகளில் பயன்படுத்துவது காது வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கட்டுரைகள் கருத்து தெரிவித்துள்ளன.
நன்மை 9: அழற்சியை எதிர்த்து போராடும்
ஆப்ரிகாட் பழம் மட்டும் இல்லாமல், இப்பழ விதைகள் கூட பயனுள்ள நன்மைகளை அளிக்கின்றன; ஆப்ரிகாட் ஆரோக்கிய நன்மைகளுள் அழற்சியை எதிர்த்து போராடுவதும், வளர்ச்சியில் இருந்து நிவாரணம் அளிப்பதும் அடங்கும். விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பெருங்குடல் புண் எனும் குடல் அழற்சி நோயிலிருந்து உடலை காக்க ஆப்ரிகாட் பழ விதை எண்ணெய் உதவும் என்ற தகவல் வெளியாகிவுள்ளது (3).
ஆர்த்ரிடிஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் மற்றும் இதர ஆர்த்ரிடிஸ் அழற்சி நோய்களை சரி செய்ய பாதாமி பழங்களில் அதிக அளவு பீட்டா கிரிப்டோசாந்தின் எனும் வேதிப்பொருள் உதவுகிறது (4). சீமை வாதுமை பழத்தில் உள்ள மெக்னீசியம், அழற்சியால் ஏற்படக்கூடிய வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
நன்மை 10: இரத்த அழுத்தம்
பொதுவாகவே பொட்டாசியம் நிறைந்த பழங்களான வாழைப்பழம், சர்க்கரை பாதாமி போன்றவை இரத்த அழுத்த குறைபாட்டை கட்டுக்குள் வைக்க உதவும் என்று அறியப்படுகிறது. தினமும் இரண்டு ஆப்ரிகாட் பழங்களை உண்பது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
நன்மை 11: கல்லீரல் சேதம்
ஆய்வுகளின் கருத்துப்படி, ஆப்ரிகாட் பழங்கள் கல்லீரல் சேதத்தை தடுத்து, கொழுப்பு கல்லீரல் நோயின் (கல்லீரலில் கொழுப்பு சேர்தல்) அறிகுறிகளை குணப்படுத்த உதவுகின்றன (5).
மேலும் ஒரு சுவாரசியமான தகவல் என்னவெனில், இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாதாமி பழங்கள் கல்லீரல் மறு உருவாக்கத்தை மேம்படுத்த பெரிதும் பயன்படுகின்றன (6).
நன்மை 12: கர்ப்ப காலம்
சீமை வாதுமை பழங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டவை மற்றும் இதன் காரணமாக தான் கர்ப்ப காலத்தில் இப்பழங்களை போதுமான அளவு உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்பழங்களில் இரும்பு மற்றும் காப்பர்/தாமிரம் ஆகிய சத்துக்களும் அதிக அளவு நிறைந்துள்ளதால், இப்பழம் கர்ப்ப காலத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற உதவுகிறது; இவ்வூட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் கருவறையில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகின்றன.
கர்ப்பிணி பெண்கள் ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்ள தொடங்கும் முன், இது குறித்து தெளிவாக படித்து அறிய வேண்டியது அவசியம் மற்றும் இப்பழங்களை உட்கொள்ள துவங்கும் முன் முறையான மருத்துவ கலந்தாய்வு மேற்கொண்டு, மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பது நல்லது.
நன்மை 13: திரவ சமநிலை
இரண்டு ஆப்ரிகாட் பழங்களில் (70 கிராம்கள்) 181 மில்லி கிராம் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன; இது 4% தினசரி தேவைப்படும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகும். இப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து அடங்கியுள்ளது; ஆகவே இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, சோடியம் சத்துடன் மிகவும் நெருங்கி செயல்பட்டு உடலின் திரவத்தை பராமரித்து, உடலின் திரவ நிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது.
நன்மை 14: சுவாச நோய்கள்
ஆஸ்துமா, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உள்ளடங்க எல்லா வித சுவாசம் சார்ந்த நோய்களையும் குணப்படுத்த ஆப்ரிகாட்கள் உதவுகின்றன என்று கூறப்படுகிறது; ஆஸ்துமாவைப் பற்றி பேசும் பொழுது, ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆஸ்துமா நோயின் அறிகுறிகளுக்கு இடையே ஒரு தலைகீழ் உறவு இருப்பது ஒரு ஆராய்ச்சியில் நிறுவப்பட்டுள்ளது.
ஆப்ரிகாட் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சுவாச நோய்களை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது; இறந்த தேவையற்ற செல்களை எதிர்த்து போராட மற்றும் ஒரு ஆன்டி ஆக்சிடென்ட்டாக இது செயல்படுகிறது. மேலும் இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஆப்ரிகாட் பழங்களில் பீட்டா கரோட்டின் சத்து நிறைந்திருப்பதால், அவை காய்ச்சலையும் கூட குணப்படுத்த உதவுகின்றன (7).
சீமை வாதுமை பழத்தின் சரும நன்மைகள் – Skin Benefits of Apricot in Tamil
சீமை வாதுமை பழம் அளிக்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:
நன்மை 1: வயது முதிர்ச்சியை தடுக்கும்
ஆப்ரிகாட் விதையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஸ்கிரப், தோலில் காணப்படும் பழைய, இறந்த சரும செல்களை போக்கி – புதிய சரும செல்களை உருவாக்க உதவுகிறது. சருமத்தை சுத்தப்படுத்தும் இந்த செயல் தோலில் உள்ள சேதமடைந்த செல்களை நீக்கி, ஃபைன் லைன் எனப்படும் கோடுகள், சிறிய சுருக்கங்கள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
ஆப்ரிகாட் எண்ணெய் மாசு மருவற்ற சருமம், மிருதுத்தன்மை மற்றும் தோலின் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை பராமரிக்க உதவுகிறது; சருமத்தை மிருதுவாக்க, இந்த எண்ணெயை மற்ற பழ எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, தோலை புதுப்பிக்க இந்த எண்ணெயை அரோமாதெரபி மசாஜ் முறையில் அடிக்கடி பயன்படுத்துவார்கள். இது மிகவும் இலேசான இயற்கை எண்ணெயாக இருப்பதால், இதனை குழந்தை தயாரிப்பு பொருட்களில் கூட பயன்படுத்துவர்.
நன்மை 2: மிளிரும் சருமம்
ஆப்ரிகாட் ஸ்கிரப்கள் தோலில் காணப்படும் சேதமடைந்த செல்களை நீக்கி, சருமத்தின் தன்மையை பராமரிக்க உதவுகின்றன; இதன் மூலம் சருமத்தின் உள்ளிருந்து புதிய மற்றும் இலேசான செல்களை உருவாக்கி, நிற மாற்ற பிரச்சனையை தடுக்க பயன்படுகிறது.
சர்க்கரையுடன், பாதாமி எண்ணெயை சேர்த்து ஒரு சூப்பர் ஸ்கிரப்பாக உடல் மற்றும் முகத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம். இது ஒரு மிகச்சிறந்த தூய்மைப்படுத்தியாக செயல்பட்டு இறந்த சரும செல்களை நீக்கி, மிருதுவான சருமத்தை பெற உதவுகிறது. மூடப்படாத துளைகள், கரும்புள்ளிகள்ஆகியவற்றை நீக்கி, சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்துவதை இந்த ஸ்கிரப் உறுதி செய்கிறது.
நன்மை 3: சரும கோளாறுகள்
சர்க்கரை பாதாமி பழ எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை அதிகம் இருப்பதால், இது சென்சிட்டிவான சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது; இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பொதுவான சரும பிரச்சனைகளான டெர்மடிடிஸ் மற்றும் சிரங்கு முதலியவற்றை குணப்படுத்த உதவுகின்றன.
ஆப்ரிகாட் எண்ணெயை, பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் ஒன்று சேர்த்து தோல் வியாதிகளை சரி செய்ய உபயோகிக்கலாம். ஆனால், சருமத்திற்கு எந்த ஒரு எண்ணெயையும் பயன்படுத்தும் முன் ஒரு முறை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்து நன்மை பெற உதவும்.
ஆப்ரிகாட் பழத்தின் சதை, முகப்பருக்களை போக்க உதவுகிறது; ஆப்ரிகாட் பழ இலைகளை சாறெடுத்து, அதனை சருமத்தில் தடவி, சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட புண் & எரிச்சல், சிரங்கு, சொறி போன்ற தோல் வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தலாம்.
சர்க்கரை பாதாமி பழம் அளிக்கும் கூந்தல் நன்மைகள் – Hair Benefits of Apricot in Tamil
சர்க்கரை பாதாமி பழம், தலைமுடிக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று இப்பொழுது காணலாம்.
நன்மை 1: தலைமுடியின் வளர்ச்சி
ஆப்ரிகாட் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, தலைமுடி வளர்ச்சிக்கு ஆதரவு தந்து, முடி இழப்பை தடுக்க உதவுகிறது; கொழுப்பு அமிலங்கள் கலந்த கலவையாக இருக்கும் இந்த வைட்டமின் இறந்த மற்றும் தேவையற்ற செல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் பயன்படுகிறது.
நன்மை 2: உச்சந்தலை பிரச்சனைகள்
ஆப்ரிகாட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை சரும ஆரோக்கியத்திற்கும், தோலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன; வறண்ட உச்சந்தலை, பொடுகு, சொரியாசிஸ், சிரங்கு போன்ற பிரச்சனைகளுக்கான ஒரு சிறந்த தீர்வாக ஆப்ரிகாட் எண்ணெய் விளங்குகிறது; இந்த எண்ணெய் வறண்ட அல்லது பொடுகு நிறைந்த அல்லது உலர்ந்த, சோர்வான தலைமுடி கொண்ட உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
இது வரை ஆப்ரிகாட் பழம் அளிக்கும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகளை பற்றி படித்து அறிந்தோம்; இனி இப்பழம் அளிக்கும் ஊட்டச்சத்து விவரம் பற்றி படித்தறியலாம்.
ஆப்ரிகாட் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Apricot Nutritional Value in Tamil
சீமை வாதுமை பழத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன எனும் தகவல் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
பாதாமி பழம் (ப்ரூனஸ் ஆர்மீனியாகா), புதியது. | ||
ஒவ்வொரு 100 கிராமில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு. மொத்தம்-ORAC umol TE/100 g-1115. | ||
(ஆதாரம்: USDA தேசிய ஊட்டச்சத்து தரவு தளம்) | ||
நியமம் | ஊட்டச்சத்து மதிப்பு | RDA -இன் சதவீதம் |
---|---|---|
ஆற்றல் | 50 Kcal | 2.5% |
கார்போஹைட்ரேட் | 11 g | 8.5% |
புரதம் | 1.4 g | 2.5% |
மொத்த கொழுப்பு | 0.4 g | 1% |
கொலஸ்ட்ரால் | 0 mg | 0% |
உணவு முறை நார்ச்சத்து | 2 g | 5% |
வைட்டமின்கள் | ||
ஃபோலேட்கள் | 9 µg | 2% |
நியாசின் | 0.600 mg | 4% |
பேன்டோதெனிக் அமிலம் | 0.240 mg | 5% |
பைரிடாக்சின் | 0.054 mg | 5% |
ரிபோஃபிளாவின் | 0.040 mg | 3% |
தையமின் | 0.030 mg | 2.5% |
வைட்டமின் ஏ | 1926 IU | 64% |
வைட்டமின் சி | 10 mg | 16% |
வைட்டமின் ஈ | 0 mg | 0% |
வைட்டமின் கே | 3.3 µg | 3% |
எலக்ட்ரோலைட்டுகள் | ||
சோடியம் | 1 mg | 0% |
பொட்டாசியம் | 259 mg | 5.5% |
தாதுக்கள் | ||
கால்சியம் | 13 mg | 1.3% |
காப்பர் | ||
இரும்பு | 0.39 mg | 5% |
மெக்னீசியம் | 10 mg | 2.5% |
மாங்கனீசு | 0.077 mg | 3% |
பாஸ்பரஸ் | 23 mg | 3% |
ஜிங்க் | 0.2 mg | 2% |
பைட்டோ ஊட்டச்சத்துக்கள் | ||
கரோட்டின் – a | 19 µg | — |
கரோட்டின் – B | 1094 µg | — |
கிரிப்டோ சாந்தின் – B | 104 µg | — |
லூடெய்ன் ஜியாசாந்தின் | 89 µg | — |
சீமை வாதுமை பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Apricot in Tamil
ஆப்ரிகாட் பழத்தை பச்சையாக உண்ண விரும்பினால், அப்பழத்தை நன்றாக கழுவி அப்படியே உண்ணலாம். பழத்தின் மையத்தில் இருக்கும் விதையை நீக்க ஸ்பூனை பயன்படுத்தி கொள்ளலாம். வாதுமை பழங்களை அறுத்து, அவற்றை யோகர்ட்டுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம் அல்லது ஓட்ஸ் உணவுடன் இப்பழத்தை சேர்த்தும் உண்ணலாம். மாலை வேளையில் ஆப்ரிகாட் பழச்சாறை பருகலாம்.
ஆனால், ஆப்ரிகாட் பழ கொட்டைகள் குறித்து சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 50 முதல் 60 பழங்களை உண்பது, உயிரை பறிக்க தேவையான அளவு சயனைடாக மாறலாம்; ஆகவே ஆப்ரிகாட் பழங்களை அளவாக உண்பது நல்லது.
ஆப்ரிகாட் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Apricot in Tamil
ஆப்ரிகாட் பழ கொட்டை அவ்வளவு பாதுகாப்பானது அல்ல; இதனை வாய் வழியாக உட்கொள்வது அல்லது ஊசி வழியாக உடலில் செலுத்தி கொள்வது பாதுகாப்பானது அல்ல. இதில் அமிக்டாலின் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் உள்ளது; இது உடலின் உட்புகும் பொழுது சயனைடாக மாறி, வலிப்பு, சுவாச பிரச்சனைகள் அல்லது மரணம் போன்ற தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
முக்கியமாக கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆப்ரிகாட் பழத்தை வாய் வழியாக உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல; ஆகவே இந்த சமயத்தில் ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
ஆப்ரிகாட் பழம் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை கொண்டது; இதனை சரியாக பயன்படுத்துவது எப்படி என்று அறிந்த பின், ஒவ்வொருவரும் இவற்றை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆப்ரிகாட் பழம் பற்றிய முழுமையான தகவல்களை இப்பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள்; வாதுமை பழம் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுடன் பகிருங்கள். மேலும் இப்பதிப்பு உதவிகரமானதாக இருந்ததா, இல்லையா என்பது போன்ற பின்னூட்டத்தையும் நீங்கள் அளிக்கலாம்.