สารบัญ:
- இயற்கைஅழகுகுறிப்புகள்!
- குறிப்பு 1: நெய்
- குறிப்பு 2: மஞ்சள்
- குறிப்பு 3: தேங்காய்எண்ணெய்
- குறிப்பு 4: தேன்
- குறிப்பு 5: எலுமிச்சை
- குறிப்பு 6: இஞ்சி
- குறிப்பு 7: கருப்பு மிளகு
- குறிப்பு 8: கடலை மாவு
- குறிப்பு 9: எள் விதை எண்ணெய்
- குறிப்பு 10: பால்
உலகில்ஜனித்த ஒவ்வொரு உயிரும், தான்அழகாகஇருக்கவேண்டும்என்றேவிரும்புகின்றனர்; உலகில்பல்வேறுதரப்பட்டஉயிரிகள்இருந்தாலும், முதன்மைஉயிரியாகவிளங்கும்மனிதர்கள்அழகின்மீதுஒருதனித்துவமான, அலாதிபிரியம் கொண்டவர்கள். ஆண்களாயினும்பெண்களாயினும், பொருட்களாயினும், பிறஉயிரிகளாயினும்அழகானவையேஅதிகம்விரும்பப்படுகின்றன; மேலும்அழகானவர்களுக்குஇந்தஉலகம்கூடுதல்மதிப்பு, அவர்கள்மீதுகூடுதல்கவனம்செலுத்தத்தான்செய்கிறது. இதையாரும்இல்லைஎன்றுகூறிமறுக்கமுடியாது; அழகான பொருட்களை வாங்கவேண்டும், அழகானவீடுகட்டவேண்டும், அழகானகணவன் / மனைவிவேண்டும்என ஒவ்வொரு சிறுசிறுவிஷயத்திலும்அழகைமுன்னிறுத்துவதுமனிதஇயல்பில் ஊறிப்போன ஒருகுணாதிசயம்ஆகும்
இப்பேற்பட்டஅழகுஎன்னும்விஷயம்நம்மிடம்இருந்தால், நமக்குகூடுதல்தன்னம்பிக்கைஏற்படும்; நமக்குள்ஒருபுதுஉற்சாகமும்பிறக்கும். நம்மில்பலர்கருமைநிறம் கொண்டும் அழகுடன்திகழ்வதுண்டு; வெள்ளையாகஇருந்தும்கூடஅழகுகுறைந்துகாணப்படுவதுண்டு. ஆகவேஅழகுஎன்னும்விஷயத்தைபெறநிறம்ஒருதடையல்ல. யார்வேண்டுமானாலும்தனக்குஏற்கனவேஇருக்கும்அழகைமேலும்அழகுபடுத்திக் கொள்ளலாம்; இவ்வாறுஅழகுபடுத்திக் கொள்ள இன்றையநாட்களில் பெரும்பாலானோர் செயற்கைஒப்பனை பொருட்களை நாடிசெல்கின்றனர் ஆனால், இந்தசெயற்கையானஅழகுசாதன பொருட்களால் தற்காலிகபளிச்சிடும்அழகுகிடைப்பதுடன், பல்வேறுபட்டபக்கவிளைவுகளும்ஏற்படுகின்றன
ஆகையால், முடிந்தஅளவுஇயற்கையானஅழகுசாதன பொருட்களை கொண்டு, இயற்கையானமுறையில்அழகினைபெறமுயல்வதேபுத்திசாலித்தனம்; இதுவே ஆரோக்கியமானதும் கூட. இப்படிப்பட்டசிறந்தஇயற்கைஅழகுகுறிப்புகளைஉங்களுக்குதெரியப்படுத்தவே MomJunction இந்தபதிப்பைவழங்குகிறது இதில்இயற்கைஅழகுகுறிப்புகள்மிகவும்தெளிவாகவிவரிக்கப்பட்டுள்ளன; படித்துபயனடையுங்கள்.
இயற்கைஅழகுகுறிப்புகள்!
இயற்கையானமுறையில்அழகினைபெறுவதுமிகவும்கடினமானசெயல்அல்ல; அன்றாடம்நாம்வீட்டில்பயன்படுத்தும் பொருட்களை கொண்டே எளியமுறையில், பணம்ஏதும்செலவுசெய்யாமல்இயற்கைஅழகினைபெறமுடியும் இதைக்கேட்டால்ஆச்சரியமாகஉள்ளதா? ஆம்இதுஉண்மைதான்! அன்றாடம்வீட்டின்சமையலறையில், தினசரிபயன்பாட்டிற்குபயன்படுத்தும் பொருட்களை கொண்டே நம்மால்இயற்கையானமுறையில், பளிச்சிடும்அழகைபெறமுடியும்
இவ்வகையில், என்னென்ன பொருட்களை பயன்படுத்தி, எப்படிப்பட்டஅழகினைபெறமுடியும்மற்றும்குறிப்பிட்டஉடல்பாகங்களுக்கானபிரத்யேகஅழகுகுறிப்புகள்என்னென்னஎன்பனவற்றைகீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைபடித்துஅறிந்து கொள்ளுங்கள்
குறிப்பு 1: நெய்
Shutterstock
பொதுவாக மனிதர்களில்அழகுக்குஅதிகமுக்கியத்துவம் கொடுப்பவர்களாக பெண்கள்திகழ்கின்றனர்; அதிலும்குறிப்பாகஇந்தியபெண்கள்அழகுக்குஅதீதமுக்கியத்துவம்அளிப்பவர்களாவர். இந்தியபெண்கள்சந்திக்கும்ஒருமுக்கியபிரச்சனைஎன்றால், சருமத்தில்ஏற்படும்விரிசல்மற்றும்வெடிப்புபிரச்சனைதான் பெரும்பாலானஇந்தியபெண்கள்குளிர்காலத்தில்குதிகால்வெடிப்புபிரச்சனையை எதிர்கொள்வர். வீட்டில்தினசரிபயன்பாட்டிற்கு உபயோகிக்கும் நெய்யைபயன்படுத்திகுதிகால்களில்ஏற்படும்விரிசல், உதடுகளில்ஏற்படும்வெடிப்புமுதலியபிரச்சனைகளைகுணப்படுத்தமுடியும் அதுஎப்படிஎன்றுஇங்குகற்றறியுங்கள்:
ก. உதடுகளுக்கானது: குளிர்காலம்ஆரம்பிக்கும்தருணத்தில், உங்களதுஉதடுகளில்வெடிப்புகள்ஏற்பட தொடங்கும்.
தீர்வு: தெளிவானவெண்ணெய்அல்லதுநெய் - மற்றஎந்தலிப்பாமும்தராத, ஈரப்பதமான, வெடிப்புகளற்றஉதடுகளைபெறஇந்ததெளிவானவஸ்துக்கள்
உதவும். இதனை தொடர்ந்து பயன்படுத்திவருவதால், உதடுகள் பட்டுபோன்ற வழவழப்பையும், மனதைப்பறிக்கும் பொலிவையும் பெறும்என்பதில்எவ்விதசந்தேகமும்இல்லை
ข. குதிகால்களுக்கானது: குளிர்காலம்அல்லதுமிகவும்வறண்ட கோடைகாலம் - இந்தசமயங்களில்குதிகால்வெடிப்புஎனும்பிரச்சனைபெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்படும்ஒன்றுஆகும்
தீர்வு: தெளிவானவெண்ணெய்அல்லதுநெய் - இதில்நல்லநிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துஉள்ளன; நெய்யில்இயற்கையாகவேவிரிசல்களைகுணப்படுத்தும்திறன்நிறைந்துள்ளது, ஆகையால், இதுஉங்கள்குதிகால்களில்ஏற்பட்டுள்ளவெடிப்புகளைஎளிதில் போக்க உதவும்
குறிப்பு 2: மஞ்சள்
தூய்மையானமஞ்சள்என்பதுஅதன்ஆன்டிசெப்டிக், அழற்சிஎதிர்ப்புபண்புமற்றும்கட்டுப்படுத்தும்திறனுக்குபெயர் போன ஒரு நறுமணப்பொருள். மஞ்சளை உபயோகித்து பல்வேறுமுகஅழகுகுறிப்புகளைபெறமுடியும்; முகத்திற்கானஅழகுகுறிப்புகளைதயாரிப்பதில்மஞ்சள்பெரும்பங்குவகிக்கிறது. உங்களதுசருமத்தில்ஏற்படும்எந்தெந்தபிரச்சனைகளுக்கு, மஞ்சளைஎப்படிபயன்படுத்தவேண்டும்என்றுஇங்குபடித்துபாருங்கள்
முகப்பருவைஎதிர்த்து போராடும்: முகத்தில்ஏற்படும்பருக்கள், இவற்றால்ஏற்படும்தழும்புகள் போன்றவற்றை முற்றிலும்ஒழிக்கமஞ்சள்பயன்படுகிறது.
எண்ணெய்சருமம் கொண்டவர்கள், அதனை போக்கி, தளர்வானசருமம்பெற, மஞ்சள்மற்றும்எலுமிச்சைசாறுஆகியஇரண்டையும்நன்குகலக்கி, ஒருஇலேசானஸ்க்ரப்தயாரித்து, அதனைசருமத்திற்குபயன்படுத்தலாம்
முகத்தில்முடிவளர்வதைதடுக்கும்: முந்தையகாலத்தில், தென்னிந்தியபெண்கள்முகத்தில்முடிவளர்வதைதடுக்கமஞ்சளைநீருடன்கலந்துமுகத்தில்தேய்த்துவந்தனர்; குளிக்கும் பொழுது மஞ்சளைமுகத்தில்தேய்த்து கொள்வர். இந்தபழக்கம் இப்பொழுது வரைஅவர்களில் தொடர்ந்து வருகிறது.
அக்குளில்முடிவளர்வதைதடுக்கும்: இந்தகுறிப்பைசெயல்படுத்துவதன்மூலம், நீங்கள்வாக்சிங்செய்வதில்இருந்துமுற்றிலுமாகவிடுதலைபெறலாம். தொடர்ந்து, தினசரியாகமஞ்சளைநீருடன்கலந்து, அக்குளில்தேய்த்துவந்தால்அங்குமுடிவளர்வதைதடுக்கமுடியும்; மேலும்கிருமிகளால் நோய்தொற்று ஏற்படுவதையும், அக்குளில்ஏற்படும்துர்நாற்றத்தையும் போக்க மஞ்சள்உதவும்.
கருவளையங்கள்மற்றும்சுருக்கங்களுக்குஎதிரானது: மோர், மஞ்சள், கரும்புச்சாறுஆகியவற்றைஒன்றுசேர்த்துஒருபேஸ்ட்டைதயாரித்து கொள்ளுங்கள். இதனைதினமும்கண்களுக்குகீழ்தடவிவாருங்கள்; தொடர்ந்து இவ்வாறுசெய்துவருவதுகண்களுக்குகீழ்கருவளையங்கள்மற்றும்சுருக்கங்கள்ஏற்படுவதைதடுக்கஉதவும்
குறிப்பு 3: தேங்காய்எண்ணெய்
Shutterstock
தொன்றுதொட்ட காலத்தில்இருந்தே, தேங்காய்எண்ணெய்முடிவளர்ச்சிக்குசிறந்ததுஎன்றுநாம் அறிவோம். ஆனால், இதுதவிரதேங்காய்எண்ணெயில்பிறபல்வேறுபட்டநன்மைகளும்நிறைந்துஉள்ளன; தேங்காய்எண்ணெயில்சருமத்திற்குநன்மைபயக்கும்நன்மைகள்பலஅடங்கியுள்ளன. தோல் பராமரிப்புஅழகுகுறிப்புகளுக்குதேங்காய்எண்ணெய்ஒருசிறந்ததேர்வுஆகும்; தினசரிதேங்காய்எண்ணெயைஎப்படிபயன்படுத்தலாம்என்பதுகுறித்தசிலகுறிப்புகள்இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
மேக்கப் நீக்கி: மேக்கப்பிற்காக செலவழிப்பது போதாது என்று, அதை நீக்கும் ஒப்பனை பொருட்களுக்காகவும் பல நூறு ரூபாய்களை செலவு செய்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை; இம்மாதிரியான செயற்கை ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதால், பிற்காலத்தில் தோல் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படுமே அன்றி, நன்மை ஏதும் ஏற்படாது. தேங்காய் எண்ணெயை மேக்கப் நீக்கியாக பயன்படுத்த தொடங்குங்கள்; மேக்கப் அணிந்த இடங்களில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து, நன்கு தேய்த்து இரண்டு நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின் இலேசான சுத்தப்படுத்தி கொண்டு சருமத்தை கழுவவும்; இவ்வாறு செய்வது இயற்கையான முறையில் சரும அழகை பாதுகாக்க உதவும். தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே தோலிற்கு ஈரப்பதம் அளிக்கும் மற்றும் சருமத்தை தளர்த்தும் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
நல்ல தளர்த்தி: தேங்காய் எண்ணெயை, பேக்கிங் சோடாவுடன் சேர்த்து ஒரு இலேசான தளர்த்தியை தயாரித்து கொள்ளுங்கள்; இக்கலவையை தொடர்ந்து தோலில் தடவி வந்தால், அது சருமத்தை தளர்வடைய செய்து, தோலிற்கு புதுப்பொலிவை வழங்கும். எண்ணெய்ப்பசையான சருமம் கொண்டவர்களுக்கும் இது பெரிதும் உதவும்; தோலை பிரகாசிக்க செய்யும்.
எண்ணெய்ப்பசை சருமத்திற்கானது: எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் – சருமத்தில் மிகச்சிறிதளவு எண்ணெயை தடவி, வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்; இதன் மூலம் சருமம் எண்ணெயை முற்றிலுமாக உள்ளிழுத்து, தோலின் தன்மை மேம்படும்.
தோலை ஈரப்பதத்துடன் வைக்கும்: குளிக்க தயார் செய்து வைத்திருக்கும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சேர்த்து, குளித்து வந்தால் அது உங்களது வறண்ட மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், மென்மையான சருமம், கவர்ச்சியான உதடுகள் முதலியவற்றை பெற முடியும்.
கருவளையங்களுக்கு எதிராக போராடும்: கருவளையங்களால் நீங்கள் தொந்தரவு அனுபவித்து வருகிறீர்களா, இனி கவலை வேண்டாம். சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து கண்களுக்கு கீழான பகுதியில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்; இந்த செய்முறையை தொடர்ந்து செய்து வந்தால், உங்களது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை இரண்டு வாரத்திற்குள்ளாக நீங்களே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு 4: தேன்
நமது முன்னோர்களான, கொள்ளுப்பாட்டிகள் தங்களது மேனியை இளமையாக வைத்துக் கொள்ள மற்றும் புத்தெழுச்சியுடன் இருக்க தேனை பயன்படுத்தி வந்ததை நம்மில் பலர் அறியோம். இயற்கையான சரும பராமரிப்பு குறிப்புகளை, தேனினை உபயோகித்து எளிதில் தயாரிக்க முடியும்; உங்களது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள தேனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு படித்து அறியுங்கள்:
வறண்ட சருமத்திற்கானது: தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன; வறண்ட சருமம் கொண்ட இந்திய பெண்களுக்கு தேன் என்பது ஒரு ஆசீர்வாதம் போன்றதாகும். தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது. சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க தேன் பெரிதும் உதவும்.
வயதாவதை தடுக்கும்: உங்களது உதடுகள், முகம், குதிகால் வெடிப்புள்ள பாதங்கள் என எந்த பாகத்தில் தேனை பயன்படுத்தினாலும், சருமத்தில் வித்தியாசம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். தேனில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், இந்திய பெண்களில் வயதாவதை தடுத்து, அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது. நாங்கள் இங்கு கூறி இருப்பதில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், நீங்களே இதை பயன்படுத்தி பாருங்கள்; உங்களுக்கே உண்மை புரியும்.
இறந்த செல்களை நீக்கும்: சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, சுருக்கங்களை போக்க உதவுவதுடன், சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது – சருமத்தை வயதானது போல் காட்டுவதற்கு காரணமான நோய்த்தொற்றுகள் மற்றும் இறந்த செல்கள் முதலியவை சருமத்தில் இடம் பெறாமல் இருக்கச் செய்ய தேன் உதவும்.
பாக்டீரியாவை எதிர்த்து போராடும்: பாக்டீரியா தொற்றுகளால், முகப்பரு போன்ற பிரச்சனைகளை கொண்ட மக்கள், அந்த பிரச்சனையில் இருந்து விடுபட, தொடர்ந்து தேனை பயன்படுத்தி வருவது நல்லது.
குறிப்பு 5: எலுமிச்சை
Shutterstock
சருமத்தை பராமரிக்க உதவும் முக்கிய பொருட்களுள், எலுமிச்சையும் அடங்கும்; சரும பராமரிப்பு குறிப்புகள் தயாரிப்பதில் எலுமிச்சை ஆற்றும் பங்கு அதிகம் ஆகும். சரும பராமரிப்பிற்கு எலுமிச்சை ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன:
முகப்பருவிற்கு எதிராக போராடும்: இயற்கையாகவே எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியா, ஆன்டி பூஞ்சை பண்புகளை கொண்ட இந்த மஞ்சள் நிற பழம், சருமத்தில் முகப்பரு மற்றும் பரு வடுக்கள் கொண்டவர்களுக்கு பெரும் நன்மை புரிகிறது. எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி வருவதன் மூலம் கரும்புள்ளிகளை விரட்டி அடிக்கலாம். முகத்திற்கான இயற்கையான அழகு குறிப்புகளை தயார் செய்வதில் எலுமிச்சை ஆற்றும் பங்கு இன்றியமையாதது.
வரித்தழும்புகளை நீக்கும்: உடலில் இருக்கும் வரித்தழும்புகள் உங்களுக்கு மிகவும் கவலை அளித்தால், இந்த எளிய சாறை பயன்படுத்துங்கள்; எலுமிச்சை சாறு எடுத்து, அதனை வரித்தழும்புகள் இருக்கும் பகுதியில் தொடர்ந்து தடவி வந்தால், வரித்தழும்புகள் மறைந்து விடும். மேலும் இது பொலிவான சருமம் உருவாக உதவும்.
வெடிப்புகள் கொண்ட உதடுகளுக்கானது: ஒரே இரவில் உதட்டில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளை போக்க எலுமிச்சை சாறு பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் உறங்க செல்லும் முன், வெடிப்புகள் உள்ள உதடுகளில் எலுமிச்சை சாறை தடவிக் கொள்ளவும்; காலை எழுகையில், உங்கள் உதடுகளில் இருந்த வெடிப்புகள் மறைந்திருப்பதை நீங்களே பார்த்து அறியலாம்.
வயதாவதை தடுக்கும்: எலுமிச்சை சாறை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவது, உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இருபுறத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, தோலில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் முதலியவற்றை போக்கி வயதாவதை தடுக்க உதவும். இயற்கையான அழகு குறிப்புகளை அளிப்பதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பு 6: இஞ்சி
இஞ்சி ஒரு சுவை தரும் முக்கிய இந்திய மசாலா பொருள் ஆகும்; இத்துடன் இஞ்சியில் அதிகப்படியான சரும நன்மைகளும் அடங்கியுள்ளன. சரும பராமரிப்பு குறிப்புகளை தயாரிப்பதில் முக்கிய உபபொருளாக இஞ்சி விளங்குகிறது.
நிறமூட்டலுக்கு எதிராக போராடும்: புதிதான இஞ்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாறை பத்து நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவது, சருமத்தில் ஏற்படும் நிறமூட்டல் பிரச்சனையை போக்க உதவும். இஞ்சியை பயன்படுத்தி பலதரப்பட்ட அழகு குறிப்புகளை தயார் செய்யலாம்.
முகப்பருவிற்கு எதிராக போராடும்:
a. இயற்கையான சுத்தப்படுத்தி: அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட இந்த இஞ்சி சாறு, முகப்பருக்களால் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். பருக்கள், வடுக்கள் போன்றவற்றை நீக்கி, தெளிவான சருமம் பெற இஞ்சி சாறை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். முக அழகு குறிப்புகளில் முதலிடம் இஞ்சிக்கு வழங்கும் அளவு இஞ்சியில் நன்மையில் நிறைந்து உள்ளன.
b. ஃபேஸ் பேக்: வாரத்திற்கு ஒரு முறை, முகப்பரு, வடுக்கள் போன்றவற்றை தடுக்க இஞ்சியை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்; வறண்ட இஞ்சி பொடி மற்றும் ஈரப்பதம் குறைந்த பால் பொடி இவற்றை ஒன்றாக சேர்த்து, மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்; பின் முகத்தை கழுவி, மாய்ஸ்ட்ரைஸரை பயன்படுத்தவும். முகத்திற்கான அழகு குறிப்புகளை தயார் இஞ்சி பெரிதும் உதவும்.
மினுமினுப்பான சருமத்திற்கானது: வறண்ட, பொடி செய்யப்பட்ட இஞ்சி கிருமிகளை நீக்கி, சருமத்தை கட்சிதப்படுத்தி, ஈரப்பதம் அளித்து, சருமத்தை பொலிவுடன் பிரகாசத்துடன் வைத்திருக்க உதவுகிறது. நான்கு கப் நீர், இரண்டு தேக்கரண்டி வறண்ட இஞ்சி பொடி சேர்த்து – இவற்றை கொதிக்க வைத்து ஒரு கலவையை தயாரியுங்கள்; கலவை பாதியாக வற்றும் வகையில் கொதிக்க வையுங்கள். கலவையை ஆற வைத்து, இதில் 5 முதல் 6 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து, நன்கு கலக்குங்கள். இதை ஒரு புட்டியில் சேமித்து தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்; இது பொலிவான சருமம் பெற உதவும். சரும பராமரிப்பு குறிப்புகளை உருவாக்க இஞ்சி அதிகம் உதவுகிறது.
வயதாவதை தடுக்கும்: இஞ்சியில் 40-ற்கும் அதிகமான ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்து உள்ளன; இந்திய பெண்கள் இஞ்சியை பயன்படுத்தி இளவயதிலேயே முதுமையான தோற்றம் தரும் சருமத்தை சரி செய்யலாம். இஞ்சி உங்களது சருமத்தை சுத்தப்படுத்தி, உடலின் ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்திற்கு என்றும் நீடித்து வரும் ஊட்டச்சத்துக்களை அளித்து, உங்களை பொலிவான சருமத்துடன் இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இஞ்சியில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களுடன் போராடி, அவற்றை நீக்கி சருமத்தை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்து, வயதாவதை தடுக்க உதவுகிறது.
குறிப்பு 7: கருப்பு மிளகு
Shutterstock
கருப்பு நிறம் கொண்ட, காரத்தன்மை கொண்ட மிளகில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அதிகப்படியாக நிறைந்து உள்ளன. இது ஆரோக்கிய பண்புகளை கொண்டதோடு, பற்பல அழகு நன்மைகளையும் தன்னுள் கொண்டதாக விளங்குகிறது; இயற்கை அழகு குறிப்புகளை தயாரிக்க கருப்பு மிளகு பெரிதும் பயன்படுகிறது. இதை சரியான வழியில் பயன்படுத்துவது எப்படி என்று இங்கு படித்து அறியுங்கள்:
வயதாவதை தடுக்கும்: சருமத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் முதலியவற்றை போக்க கருப்பு மிளகு அருமையான வழியில் உதவும். இயற்கையான சரும பராமரிப்பு குறிப்புகளை உருவாக்க கருப்பு மிளகு அதிகம் உதவுகிறது; கருப்பு மிளகை உணவில் சேர்த்து உட்கொண்டு வருவது, வயதாவதை தடுக்க உதவும்.
சரும தளர்த்தி: கருப்பு மிளகை பொடித்து, தயிருடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம், இக்கருப்பு மிளகு ஒரு சரும தளர்த்தியாக செயல்படுவதை அறிய முடியும்.
சரும சுத்தப்படுத்தி: கருப்பு மிளகு சருமத்தை சுத்தப்படுத்த பயன்படுகிறது; இது உடலின் ஓட்ட அளவை மேம்படுத்தி, சருமத்திற்கு போதுமான அளவு, புதிய ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. இயற்கையான சரும பராமரிப்பு குறிப்புகளுக்கு கருப்பு மிளகு ஒரு இன்றியமையாத விஷயமாக திகழ்கிறது.
முகப்பருவிற்கு எதிராக போராடும்: இயற்கையிலேயே கருப்பு மிளகுகளில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், முகத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் பருக்களை போக்க உதவுகிறது; இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல பலனை பெறலாம். முகத்திற்கான அழகு குறிப்புகள் தயாரிப்பதில் கருப்பு மிளகு முக்கிய பங்கு ஆற்றுகிறது.
சருமத்தை ஒளிரச் செய்யும்: சருமத்தை ஒளிரச் செய்ய உதவும் ஒரு இயற்கையான பொருளை அல்லது வழியை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நன்கு பொடித்த கருப்பு மிளகை, தேனுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால், ஒளிரும் சருமத்தை பெற முடியும்.
குறிப்பு 8: கடலை மாவு
கடலை மாவு என்பது இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட, பலராலும் விரும்பி பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும். இது சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது; முகத்திற்கு இயற்கையான அழகை வழங்கும் குறிப்புகளை தயார் செய்ய உதவும் முக்கிய பொருள் ஆகும். இது சருமத்திற்கு எவ்விதத்தில் பயன்படுகிறது என்று இங்கு படித்தறியுங்கள்:
சுத்தப்படுத்தி: நம்முடைய பாட்டிமார்கள் அடிக்கடி கூறுவது போல், மஞ்சள் மற்றும் கடலை மாவு கலந்து சருமத்தை சுத்தம் செய்தால், அற்புதமான மாற்றங்களை பெறலாம் என்பது முற்றிலும் உண்மையே! நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
சரும தளர்த்தி: கடலை மாவு ஒரு நல்ல சுத்தப்படுத்தியாக பயன்படுவதோடு, இது ஒரு இலேசான தளர்த்தியாகவும் பயன்படக்கூடியது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தில் காணப்படும் துளைகள் போன்றவற்றை மறைய செய்யும். முகத்திற்கான அழகு குறிப்புகளில், கடலை மாவு ஒரு முக்கிய இடம் வகித்துள்ளது.
கருமையை போக்கும்: சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் கருமையை போக்க, கண்ட கண்ட அழகு சாதன பொருட்கள் வாங்குவதை தவிருங்கள்; வெறும் 4 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். இதனை சுத்தப்படுத்திய முகத்தில் தடவி, பேஸ்ட் காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவவும்; இந்த பேஸ்ட்டால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
சருமத்தை ஒளிரச் செய்யும்: ஒளிரும் சருமத்தை பெற விரும்பும் ஒவ்வொருவரும், கடலை மாவை கொண்டு தங்களது ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்; 1 தேக்கரண்டி பால் மற்றும் எலுமிச்சை சாறு, 4 தேக்கரண்டி கிரீம் நிற பொடி ஆகியவற்றை ஒன்றாய் கலந்து சருமத்தில் தடவுவதன் மூலம் கரும்புள்ளிகளை நீக்க முடியும்; மேலும் பொலிவான சருமத்தையும் பெற முடியும். 3 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி கிரீம், 1 தேக்கரண்டி நில ஆரஞ்சு தோல் – இந்த பொருட்களை கலந்து சருமத்தில் தடவி, காய்ந்த பின் கழுவி வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்.
முகப்பருவிற்கு எதிராக போராடும்: பருக்களினால் தொந்தரவை அனுபவித்து வருபவர்கள், அந்த தொல்லையில் இருந்து விடுபட, இந்த கடலை மாவை பயன்படுத்தலாம்; இதில் ஆன்டி பாக்டீரிய பண்புகள் நிறைந்து உள்ளன. முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடியை போக்க, கடலை மாவு மற்றும் வெந்தய பொடி ஆகியவை கலந்த கலவையை பயன்படுத்தலாம்.
குறிப்பு 9: எள் விதை எண்ணெய்
Shutterstock
எள் விதை எண்ணெயை நல்லெண்ணெய் அல்லது டில் எண்ணெய் என்றும் அழைப்பர்; இதில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முதலியவை நிறைந்து உள்ளன. இது இயற்கையான அழகு குறிப்புகள் தயாரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
அழற்சியை குணப்படுத்தும்: எள் எண்ணெயில் அதிகப்படியான அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளன; அலர்ஜி அல்லது ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய அழற்சியை போக்க இந்த எண்ணெய் உதவுகிறது. குளிர்காலத்தில் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சனையான பூஞ்சை தொற்றுக்களை போக்கவும் இந்த எண்ணெயில் இருக்கக்கூடிய பண்புகள் உதவுகின்றன.
சுத்தப்படுத்தி: இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்திருப்பதால், இதை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால், அது முகத்தை சுத்தப்படுத்திவிடும். பின் இலேசான சுத்தப்படுத்தி கொண்டு முகத்தை கவனமாகக் கழுவவும். எள் விதை எண்ணெய், தண்ணீர், ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, இரவில் சருமத்தில் தடவி காலையில் கழுவி வந்தால், அது மிளிரும், மாசில்லாத சருமம் பெற உதவும்.
மாய்ஸ்ட்ரைஸர் அல்லது ஈரப்படுத்தி: புண்கள், வெட்டுக்களை குணப்படுத்தும் தன்மையுடன், இந்த எண்ணெயில் அதிக ஈரப்படுத்தும் பண்புகளும் நிறைந்து உள்ளன; அதனால் தான் நம் பாட்டிமார்கள் இந்த எண்ணெய் தேய்த்து குளிக்க வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் பொலிவான சருமத்தை பெற முடியும்.
வயதாவதை தடுக்கும்: மேலே கூறப்பட்டது போல, இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் இருக்கும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, சருமத்தில் காணப்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்க உதவும். இந்த எண்ணெயை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தி வருவது, உங்களை என்றும் இளமையாக இருக்க வைக்கும்.
விரிசல்களை குணப்படுத்தும்: இந்த எண்ணெயை தொடர்ந்து காலில் தடவி வந்தால், பாதங்களின் குதிகால்களில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள் மற்றும் வெடிப்புகளை வெறும் இரண்டு வாரத்தில் போக்க உதவும். தூங்கும் பொழுது பாதத்தில் தடவிய எண்ணெய் படுக்கையில் ஒட்டி விடாமல் இருக்க, சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு 10: பால்
கால்சியம் சத்தின் ஆதாரமே பால் தான் எனலாம்; நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்த பால் மிகவும் நல்லது. ஆனால், பாலினால் பயனுள்ள சரும நன்மைகளை அளிக்க முடியுமா? ஆம் நிச்சயமாக அளிக்க முடியும்! ஆச்சரியமாக உள்ளதா, இதை படித்து பாருங்கள்!
சரும சுத்தப்படுத்தி: பால் ஒரு இயற்கை சுத்தப்படுத்தி ஆகும்; வெறும் 2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறை கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவி விடுங்கள்; இது சருமத்தை தூய்மைப்படுத்த உதவும். முக அழகு குறிப்புகளில் பால் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது; பாலை ஒரு அழகு சாதன பொருளாக பயன்படுத்துவதன் மூலம், பளபளப்பான சருமத்தை பெற முடியும்.
பொலிவான சருமத்திற்கான பேக்: பாலை, பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து, ஒரு ஃபேஸ் பேக் போன்று முகத்தில் தடவினால், முகத்தில் உடனடி பொலிவு ஏற்படும். 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் – இவற்றுடன் பால் கலந்து பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும்; இதில் 2 முதல் 3 துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்; பின் கழுவி, ஐஸ்கட்டியை சருமத்தில் தேய்க்கவும். இதன் மூலம் பொலிவான சருமத்தை பெறலாம்.
வறண்ட சருமத்திற்கானது: பால் வறண்ட சரும பிரச்சனையை போக்க உதவும் ஒரு முக்கிய பொருள் ஆகும்; 1 மசித்த வாழைப்பழம், தேன் ஆகியவற்றுடன் பால் கலந்து ஒரு பேஸ்ட் தயாரித்து வறண்ட சருமத்தின் மீது தடவவும். இந்த பேஸ்ட் காய்ந்ததும் அதை முழுமையாக கழுவவும்; பின் கழுவிய சருமத்தில் சிறிதளவு பாலை தடவி மசாஜ் செய்து, சருமத்தை ஈரப்படுத்தும் செயல்பாட்டை முடிக்கவும். முக அழகை மேம்படுத்த உதவும் குறிப்புகளில் பால் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
சரும தளர்த்தி: சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும் தளர்த்தியாக பால் பயன்படுகிறது; பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையான தளர்த்தியாக செயல்படுகிறது. கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அதில் 3 கப் கிரீம் இல்லாத பாலை சேர்க்கவும்; இதில் அரை கப் மிதமான சூடுநீரை சேர்த்து இக்கலவையை 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இந்த கலவையை உங்கள் உடலில் தடவி, தேய்ப்பதன் மூலம் இறந்த செல்களை நீக்கி விடலாம். இந்த பால் ஸ்கிரப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், நல்ல பலன்களை பெறலாம்.
மேற்கூறப்பட்ட முகம் மற்றும் சருமத்தை அழகுபடுத்த உதவும் குறிப்புகள் மூலம், வீட்டின் சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டே, அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கும், சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு விடலாம் என்பது தெளிவாகிறது. வெவ்வேறு சரும வகைகளின் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்று கவலைப்பட வேண்டாம்; ஒரு குறிப்பிட்ட பொருளை – சுத்தப்படுத்தி, தளர்த்தி அல்லது ஃபேஸ் பேக் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆகையால், அடுத்து நீங்கள் அழகு சாதன பொருட்களை வாங்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து வாங்குங்கள். ஏனெனில் வீட்டில் இருக்கும், சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டே ஒப்பனை செய்து கொள்ளலாம் அல்லவா! இவற்றை முயற்சித்து பாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் வீணாக செலவாவதை தடுப்பதுடன், ஆரோக்கியமான, பக்க விளைவுகளற்ற பலன்களை பெறலாம். இவற்றை பயன்படுத்த தொடங்குவதற்கு முன், மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்து கொண்டால், இந்த பொருட்களால் உங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். உங்களது சருமத்தின் தன்மைக்கேற்ற சமையலறை பொருட்களை தேர்வு செய்து, கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை முயற்சித்து பாருங்கள்; தினமும் பயன்படுத்த முயலுங்கள். இந்த குறிப்புகளில் நீங்கள் முயற்சித்த மற்றும் உங்களுக்கு பலன் அளித்த குறிப்பை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!